டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Breaking News Live: லோக்சபாவில் காங்., அதிமுக வெளிநடப்பு.. முத்தலாக் மசோதா நிறைவேறியது

Google Oneindia Tamil News

டெல்லி: மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் நடைமுறை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா மீது லோக்சபாவில் இன்று விவாதம் நடைபெறுகிறது.

இன்றைய அவை நடவடிக்கையில் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் எம்பிக்களுக்கு அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

புதிய மசோதாவின்படி முத்தாலக் முறை சட்டவிரோதமானது என்றும் உடனடி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Triple talaq bill debate in Parliament - Live updates

Newest First Oldest First
6:46 PM, 27 Dec

லோக்சபாவில் முத்தலாக் சட்டம் நிறைவேறியது

காங்கிரஸ் வெளிநடப்புக்கு இடையே முத்தலாக் சட்டம் நிறைவேற்றம்

6:46 PM, 27 Dec

முத்தலாக் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்
6:46 PM, 27 Dec

காங்கிரஸைத் தொடர்ந்து அதிமுக எம்.பிக்களும் வெளிநடப்பு

வெளிநடப்புகளுக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டது

6:44 PM, 27 Dec

முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு

மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் காங். எம்.பிக்கள்

5:37 PM, 27 Dec

வரதட்சணையும் சிவில் பிரச்சினைதான்- அமைச்சர் ஸ்மிருதி இரானி

வரதட்சணைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது

வரதட்சணை கொடுமை போலதான் முத்தலாக் சட்டமும் பயன்படும்

லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சு

4:09 PM, 27 Dec

பலாத்காரம், கொலை, கொள்ளைக்கும் தண்டனை வேண்டாம் என்பீர்களா- முக்தர் அப்பாஸ் நக்வி
4:09 PM, 27 Dec

முத்தலாக் மசோதா வாதத்தில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கேள்வி
4:09 PM, 27 Dec

முத்தலாக் சட்டத்தால், ஆண்கள் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்ற எதிர்க்கட்சிகள் வாதத்திற்கு நக்வி பதில்
3:46 PM, 27 Dec

முத்தலாக் சட்டம் சமூக அமைதியை சீர் குலைக்கும்- அதிமுக எம்.பி

முத்தலாக் சட்ட மசோதாவை தேர்வு கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்

கணவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டால் மனைவியை பராமரிப்பது யார்?

லோக்சபாவில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா பேச்சு

3:25 PM, 27 Dec

இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் சட்டத்தில் கிடையாது - பாஜக எம்.பி. மீனாட்சி லேகி

மதசார்பற்ற நாடான இந்தியா, முத்தலாக் நடைமுறையை பின்பற்றுவது ஆச்சரியமாக உள்ளது- மீனாட்சி லேகி

2:20 PM, 27 Dec

லோக்சபாவில் முத்தலாக் விவாதம் தொடங்கியது

பெண்களுக்கு உரிமை வழங்குவது முத்தலாக் சட்டம்- சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

எந்த ஒரு மதத்தையும் குறி வைத்து சட்டம் கொண்டுவரப்படவில்லை- ரவிசங்கர் பிரசாத்

2:10 PM, 27 Dec

பல்வேறு கட்சியினரும் கோஷமிட்டு வருவதால், லோக்சபா 2 மணிக்கு ஒத்திவைப்பு
2:10 PM, 27 Dec

முத்தலாக் மசோதாவை, தேர்வு கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று இ.கம்யூனிஸ்ட் தலைவர் ராஜா கோரிக்கை
2:10 PM, 27 Dec

இஸ்லாமிய பெண்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாள், மசோதாவை நிறைவேற்றுவது உறுதி என்று அமைச்சர் விஜய் கோயல் நம்பிக்கை

English summary
You can get Triple talaq bill debate in Parliament Winter Session live here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X