டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜ்யசபாவில் நிறைவேறிய முத்தலாக் மசோதா- 'வெளிநடப்புகள்' மூலம் சாதித்த பாஜக!

Google Oneindia Tamil News

Recommended Video

    மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது முத்தலாக் தடை சட்டம்

    டெல்லி: ராஜ்யசபாவிலும் சர்ச்சைக்குரிய முத்தலாக் மசோதாவை கடும் எதிர்ப்புகளிடையே வெற்றிகரமாக நிறைவேற்றி சாதித்திருக்கிறது பாஜக.

    ராஜ்யசபாவில் பாஜகவுக்கு மசோதாக்களை நிறைவேற்ற பெரும்பான்மை இல்லை. ஆனால் கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளின் ஆதரவுகள், வெளிநடப்புகள் மூலம் யாருடைய கொள்கைக்கும் பங்கம் வராமல் தம்முடைய எண்ணத்தை நிறைவேற்றியிருக்கிறது பாஜக.

    லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால் நினைத்த மசோதாக்களை திருத்தங்களை நிறைவேற்றிவிடுகிறது பாஜக. எதிர்க்கட்சிகள் தங்களால் கருத்துகளைத்தான் முன்வைக்க முடிகிறதே தவிர பாஜகவின் இந்த குதிரை பாய்ச்சலைத் தடுக்க முடியவில்லை.

    கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு

    கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு

    முத்தலாக் மசோதா என்பது சிறுபான்மையினர் தொடர்பானது. இது மதச்சார்பற்ற கட்சிகளின் வாக்கு வங்கி விவகாரம் என்பதால் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் பல கட்சிகள் எதிர்க்கவே செய்தன.

    அதிமுகவின் மூன்று நிலைப்பாடு

    அதிமுகவின் மூன்று நிலைப்பாடு

    லோக்சபாவில் முத்தலாக் மசோதாவை ஆதரித்தது அதிமுக. ஆனால் ராஜ்யசபாவில் இதே மசோதாவை கடுமையாக எதிர்த்தது பாஜக. ஆனால் வெளிநடப்பு செய்வோம் எனவும் அறிவித்தது. பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் இம்மசோதாவை எதிர்க்கின்றன.

    முதலில் எதிர்ப்பு

    முதலில் எதிர்ப்பு

    ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத சூழலில் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கின்றன போது மசோதாவை நிறைவேற்ற இயலாத சூழ்நிலை ஏற்படும் இதற்காக பாஜக கையாண்ட தந்திரம்தான் சபையில் எதிர்ப்பு தெரிவித்து கருத்தை கூட்டணி கட்சிகள் பதிவு செய்யட்டும்.

    எதிர்ப்புடன் வெளிநடப்பு

    எதிர்ப்புடன் வெளிநடப்பு

    வாக்கெடுப்பின் போது மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்யட்டும். அப்படி ஒரு சூழல் வரும்போது மசோதா எளிதில் நிறைவேறிவிடும் என்பதுதான் பாஜகவின் கணக்கு. இந்த வியூகத்தை வைத்துதான் ராஜ்யசபாவில் 99 வாக்குகள் வித்தியாசத்தில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்றி காட்டிவிட்டது பாஜக.

    English summary
    BJP Govt today passed Triple talaq bill in Rajyasabha by 99 votes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X