டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா தாக்கலானது

Google Oneindia Tamil News

Recommended Video

    Triple Talaq Bill :ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா தாக்கல்-வரிந்து கட்டி காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்

    டெல்லி: முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்ய அவர்களது கணவர்கள் தலாக்.. தலாக்... தலாக்.. என மூன்று முறை கூறினால் போதும். அத்துடன் அந்த திருமண பந்தம் முடிந்து விடுவதாக முஸ்லிம் தனிநபர் சட்டம் கூறுகிறது.

    Triple talaq bill will be passed in Rajyasabha

    இந்த முத்தலாக்கை சில ஆண்கள் தவறாக பயன்படுத்துவதாக அன்றாடம் புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதில் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்புவது, போனில் முத்தலாக் சொல்வது என பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கின.

    இந்த நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முத்தலாக் சட்ட மசோதா கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தநிலையில் இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான ஆட்சி வந்ததை அடுத்து முதல் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

    இதில் முத்தலாக் மசோதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக மாநிலங்களவைக்கு அனைத்து பாஜக எம்பிக்களும் தவறாமல் வர வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    English summary
    Triple talaq bill will be passed in Rajyasabha as it was already passed in Loksabha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X