டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தாஜ்மஹால் பிரமிப்பானது சரி.. சபர்மதி ஆசிரமத்தில் காந்தி குறித்து டிரம்ப் குறிப்பிடாதது ஏன்?

Google Oneindia Tamil News

டெல்லி: ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் குறித்து பார்வையாளர்கள் புத்தகத்தில் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சபர்மதி ஆசிரம விருந்தினர் புத்தகத்தில் காந்திஜி குறித்து குறிப்பிடாமல் மோடியை புகழ்ந்தது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    Trump india visit | சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுற்றினார் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் இரு நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று வருகை தந்துள்ளார். அவர் அகமதாபாத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார். அங்கிருந்த ஒவ்வொரு பொருட்களையும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டார்.

    காந்தி கூறிய தத்துவங்களான 3 குரங்கு பொம்மை குறித்து மோடி விளக்கிய போது அதை அதிசயத்துடன் கேட்டறிந்தார்.

     பிரதமையில் மோடியை சந்தித்த ட்ரம்ப் - இரண்டு பேரோட ராசியும் எப்படி இருக்கு பாருங்க பிரதமையில் மோடியை சந்தித்த ட்ரம்ப் - இரண்டு பேரோட ராசியும் எப்படி இருக்கு பாருங்க

    மெலானியா

    மெலானியா

    அங்கிருந்த விருந்தினர் புத்தகத்தில் அவர் குறிப்பிடுகையில் என்னுடைய நண்பர் பிரதமர் மோடிக்கு.. நன்றி.. அற்புதமான பயணம் என மகிழ்ந்து பதிவிட்டுள்ளார் டிரம்ப். அது போல் ஆக்ராவுக்கு சென்ற டொனால்ட் டிரம்ப் அங்கு யமுனை நதிக்கரையில் தனது மனைவி மெலானியாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    டிரம்ப்

    டிரம்ப்

    பின்னர் அங்கிருந்த விருந்தினர் புத்தகத்தில் தாஜ்மஹால் பிரமிப்பைத் தூண்டுகிறது. இந்திய கலாச்சாரத்தின் அழகான வளம் மற்றும் பன்முகத்தன்மைக்கு காலமற்ற சான்று. நன்றி இந்தியா என தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை தந்துள்ள டிரம்ப், தாஜ்மஹால் குறித்து எழுதியுள்ளார். ஆனால் மகாத்மா காந்தி குறித்து அவர் எழுதாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    காந்தி

    கடந்த 2015-இல் இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா குறித்து எழுதியதை நெட்டிசன்கள் நினைவுக்கூர்ந்துள்ளனர். ஒபாமா ராஜ்காட்டில் இருந்த விருந்தினர் புத்தகத்தில் டாக்டர் மார்டின் லூதர் கிங் என்ன கூறினாரோ அது இன்று உண்மையாக இருக்கிறது. காந்தியின் ஆன்மா இன்றும் இந்தியாவில் வாழ்ந்து வருகிறது.

    அன்பு

    அன்பு

    அந்த ஆன்மா உலகிற்கே மிகப் பெரிய வரப்பிரசாதம். மக்களிடையே அன்பும் அமைதியும் எப்போதும் நிலவட்டும் என தெரிவித்துள்ளார். அதிபராக இருக்கும் டிரம்பிற்கு காந்தி குறித்து தெரியாமல் இருந்திருக்காது. இல்லாவிட்டாலும் சபர்மதி ஆசிரமத்தில் கேட்டதை வைத்தாவது எழுதியிருக்கலாம். விருந்தினர் புத்தகம் என்பது என்ன? ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடத்திற்கு உலகத் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் வரும் போது அந்த இடம் குறித்தோ அதை ஏற்படுத்தியவர்கள் குறித்தோ எழுதுவதற்காகத்தான்.

    காங்கிரஸ் கண்டனம்

    காங்கிரஸ் கண்டனம்

    அதையெல்லாம் மறந்துவிட்டு மோடி புராணத்தை டிரம்ப் பாடியது இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போல் நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று ராஜ்காட் செல்லும்போதாவது காந்தி குறித்து எழுதுகிறாரா என பார்ப்போம்.

    English summary
    US President Donald Trump didnt mention anything about Gandhiji in Sabarmati Ashram visitor's book as he wrote about Tajmahal in the book.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X