டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய ராணுவத்தில் முதல்முறையாக பெண் சிப்பாய் படை... ஆர்வம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவத்தில் சிப்பாய் வேலையில் பெண்கள் சேரலாம் என இந்திய ராணுவம் முதல் முதலாக அறிவித்துள்ளது.

21ம் நூற்றாண்டில் ஆண்கள் மட்டும் செய்யும் வேலைகள் என்று எதையும் கூறமுடியாத இருந்து வந்தது. அதன்படி ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முத்திரை பதிக்க ஆரம்பித்தனர். விண்வெளிக்கே போய்வந்துவிட்டனர்.

இந்திய ராணுவத்தில் சிப்பாயாக இதுவரை ஆண்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சிப்பாய் வேலையில் பெண்கனையும் சேர்க்கும் முடிவுக்கு இந்திய ராணுவம் வந்துள்ளது.

 இலங்கையில் நீடிக்கும் பதற்றம்.. மர்ம நபர்களிடமிருந்து 21 கையெறி குண்டுகள் பறிமுதல்.. தொடரும் சோதனை! இலங்கையில் நீடிக்கும் பதற்றம்.. மர்ம நபர்களிடமிருந்து 21 கையெறி குண்டுகள் பறிமுதல்.. தொடரும் சோதனை!

பெண் சிப்பாய் படை

பெண் சிப்பாய் படை

இதன்படி இந்திய ராணுவத்தில் பெண் சிப்பாய்கள் படை உருவாக உள்ளது. இந்த படையில் ஆர்வமுள்ள இளம்பெண்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 100 பெண் சிப்பாய்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வம் உள்ள இளம்பெண்கள் வரும் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி,ஜூன் 8 வரையில் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி

வயது தகுதி

விண்ணப்பிக்க விரும்பும் பெண்மணிகள் 17½ முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பொது வினா தாள் அடிப்படையில் தேர்வாளர்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஹால்டிக்கெட்

ஹால்டிக்கெட்

பெங்களூரு, சில்லாங், அம்பாலா, லக்னோ, ஜபல்பூர், ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. எனவே விண்ணப்பிக்கும் பெண்கள் தங்களுக்கு அருகில் உள்ள தேர்வு மையத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டியது அவசியம். தேர்விற்கான ஹால்டிக்கெட், விண்ணப்பதாரரின் அதிகாரப்பூர்வ இமெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கப்படும்.

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள்

மருத்துவ பரிசோதனையின் போது பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. நிரந்திரமாக பச்சை குத்தியிருப்பவர்கள் நிபந்தனைகளின் படியே தேர்ந்தெடுக்கப்படுவர், கர்ப்பிணி பெண்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்ப முகவரி

விண்ணப்ப முகவரி

ஆர்வமும் தகுதியமுள்ள பெண்கள் www.joinindianarmy.nic.in என்ற ராணுவ இணையதளத்தின் மூலம் வருகிற ஜூன் மாதம் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tthe first time, Indian Army offering jobs in military police to women. The application window for recruitment of "soldier general duty (Women Military Police)" will close on 8 June.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X