டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிவி9 எக்சிட் போல்: மகாராஷ்டிராவில் காவிக் கொடியே மீண்டும்.. காங்கிரஸுக்கு வாய்ப்பில்லை

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என தெரிகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: டிவி9 நிறுவனம் நடத்திய எக்சிட் போல் முடிவுகளின்படி மீண்டும் அங்கு பாஜக ஆட்சியே அமையவுள்ளது.

88 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்டது மகாராஷ்டிரா மாநிலம். இப்போது இங்கு பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இருந்து வருகிறார். நீண்டகாலத்துக்குப் பின் தேவேந்திர பட்நாவிஸ் தன்னுடைய 5ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

இந்நிலையில் இன்று நடந்த இடைத்தேர்தலில், ஆளும் பாஜக - சிவசேனா ஒரு அணி, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியாக ஒரு அணி.. என்று மோதின. இதை தவிர, வஞ்சித் பகுஜன் அகாடி, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா, ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வலுவாக மோதலில் இறங்கின.

நியூஸ் 18 டிவியும் சொல்லிருச்சு... மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனாவுக்கு அமோக வெற்றி!நியூஸ் 18 டிவியும் சொல்லிருச்சு... மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனாவுக்கு அமோக வெற்றி!

 ஹரியானா

ஹரியானா

மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபைகளுக்கு இன்று நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளன. இந்த மாநிலங்கள் தவிர தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களில் சட்டசபை இடைத் தேர்தலும் நடைபெற்றது. இதன் வாக்குப் பதிவு இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

 பிந்தைய கணிப்பு

பிந்தைய கணிப்பு

முன்னதாக, இந்த தேர்தலில் பாஜக அணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்த நிலையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை பல்வேறு டிவி செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

 காங்கிரஸ்

காங்கிரஸ்

அதன்டி டிவி 9 நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளது. பாஜக சிவசேனா கூட்டணிக்கு 197 இடங்கள் கிடைக்கும் என அது தெரிவித்துள்ளது. அதேபோல காங்கிரஸ் கூட்டணிக்கு 75 இடங்களே கிடைக்கும் என இது தெரிவித்துள்ளது.

 மற்ற கட்சிகள்

மற்ற கட்சிகள்

மற்ற கட்சிகளுக்கு 16 இடங்கள் கிடைக்கக் கூடும் என்று இது கணித்துள்ளது. இதன் மூலம் பாஜக மீண்டும் அங்கு ஆட்சியை தக்க வைக்கக் கூடிய சூழல் உறுதியாகியுள்ளது. மேலும் மகாராஷ்டிர மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்பதும் தெளிவாகிறது.

English summary
maharashtra assembly election 2019: The BJP seems to be back in Maharashtra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X