டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அய்யோ மோடி பேச போறாராம்.. அதான் நான் இப்பவே ஏடிஎம்-க்கு வந்துட்டேன்.. நெட்டிசன்கள் கிண்டல்

பிரதமர் மோடியின் மிஷன் சக்தி அறிவிப்பு குறித்து ட்வீட்கள் வைரலாகி வருகின்றன.

Google Oneindia Tamil News

டெல்லி: "மோடி பேசப்போறாராம்.. அதான் நான் இப்பவே ஏடிஎம்-க்கு வந்துட்டேன்" என்பது முதல் பிரதமரின் அறிவிப்பு குறித்து ட்வீட்டை தெறிக்க விட்டுள்ளனர் நெட்டிசன்கள்!

இன்னைக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு இருக்கிறது என்று மோடி ட்வீட் போட்டாலும் போட்டார், ஒட்டுமொத்த இந்தியாவும் மலங்க மலங்க விழித்தது.. அடி வயிற்றில் அள்ளு கிளம்பியது.. போச்சு.. என்னமோ நடக்க போகுது என்ற யூகத்துக்கு மக்கள் வந்தனர்.

கடைசியில் நம் இந்திய விண்வெளி சமாச்சாரத்தை பற்றி பெருமையான விஷயத்தை தான் பிரதமர் அறிவித்தார்.

பெருஸ்ஸா எதிர்பார்த்து பயந்து ஏமாந்து போன மக்கள்.. கொஞ்ச நேரத்துக்கு நாட்டையே ஸ்தம்பிக்க வைத்த மோடி பெருஸ்ஸா எதிர்பார்த்து பயந்து ஏமாந்து போன மக்கள்.. கொஞ்ச நேரத்துக்கு நாட்டையே ஸ்தம்பிக்க வைத்த மோடி

மீம்ஸ்கள்

மீம்ஸ்கள்

ஆனால் இதற்கு இவ்வளவு பீடிகை என்றுதான் தெரியவில்லை. ஆனால் அதற்குள் நம் நெட்டிசன்கள் சாட்டிலைட்டைவிட வேகமாக மீம்ஸ் போட்டு கலக்கிவிட்டனர். முக்கியமான நபர்களும் மோடியின் அறிவிப்பு குறித்து ட்வீட் போட்டனர்.

செயற்கைகோள்

செயற்கைகோள்

உபி முன்னாள் பிரதமர் அகிலேஷ் யாதவ் விடுத்துள்ள டிவீட்டீல், "இன்று பிரதமர் நரேந்திர மோடி அவராகவே டிவியிலிருந்து ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொண்டு ஒட்டு மொத்த நாட்டையும் திசை திருப்பியுள்ளார். வேலையில்லாப் பிரச்சினை, ஊரகப் பகுதிகளின் பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு என எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் மக்களை திசை திருப்பி விட்டுள்ளார். செயற்கைக் கோளை தாக்கி அழித்த முழுப் பெருமையும் டிஆர்டிஓ மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு மட்டுமே போய்ச் சேர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சர்ஜிகல் ஸ்டிரைக்

மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் போட்ட டிவீட்: "நாமெல்லாம் பிரதமர் மோடி என்ன சொல்லப் போகிறாரோ என்று மூச்சைப் பிடித்துக் கொண்டி டிவி, ரேடியோக்கள் முன்பு காத்திருந்தோம். ஆனால் மோடியோ, பல காலமாக டிஆர்டிஓ, இஸ்ரோ விஞ்ஞானிகள் கஷ்டப்பட்டு பாடுபட்டு சாதித்த விஷயத்தை தான் சாதித்தது போல சொல்லி புதிய சர்ஜிகல் ஸ்டிரைக் செய்துள்ளார். இந்த அறிவிப்பால் நாட்டில் 10 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்று நம்புவோம்!"

ஏடிஎம்

பிரதான் என்பவர் போட்டுள்ள டிவீட்டில்: "பிரதமர் நாட்டுக்கு உரையாற்றப் போகிறாராம். நான் இப்பவே ஏடிஎம் மையத்துக்கு வந்து சேர்ந்து விட்டேன்" என்று கிண்டலாக போட்டுள்ளார்.

விதைக்கறது ஒருத்தன்..

விதைக்கறது ஒருத்தன்..

ஆக மொத்தம் கூட்டிகழித்து பார்த்தால், அறிவிப்பு என்று சொன்னது கடைசியில் புஸ்ஸுதான்.. அது மட்டுமில்லை,.. "கஷ்டப்பட்டு விதைக்கிறவன் ஒருத்தன்; வலிக்காம அறுவடை பண்றவன் இன்னொருத்தன்" என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது.

English summary
Viral Tweets about PM Modis new announcement and Mission Shakthi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X