டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிர்ச்சி.. சீனா லேபிலிருந்து கொரோனா வைரஸ் வெளியானதாக கூறிய டாக்டர் டுவிட்டர் கணக்கு சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவின் லேப்பில் இருந்துதான் கொரோனா வைரஸ் வெளியாகி இருந்தது. வைரஸை கட்டுப்படுத்த சீனா எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று சீன வைரஸ் தொற்று ஆய்வாளரும் டாக்டருமான லி மெங் யான் கூறியிருந்தார்.

இதையடுத்து இவருக்கு ட்விட்டரில் ஃபலோவர்கள் பெருகினர். இதையடுத்து இவரது ட்விட்டர் கணக்கை ட்விட்டர் சஸ்பெண்ட் செய்துள்ளது. இவரது ட்விட்டர் பக்கத்தில், ''இந்த ட்விட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

Twitter account of Chinese Virologist Li-Meng Yan suspended

முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், தலைப்புகளால் திசை திருப்பும் வகையில் செய்திகளை பரப்பினால் அவர்களது ட்விட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என்று ட்விட்டர் முன்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இவரது ட்விட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

பாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்து இருந்த லி மெங் யான், ''உண்மையை மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கின்றனர். இதனால் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

1962ல் செய்த அதே குள்ள நரித்தனம்.. இந்திய வீரர்கள் மனோதிடத்தை குலைக்க சீனா செய்யும் வேலையை பாருங்க1962ல் செய்த அதே குள்ள நரித்தனம்.. இந்திய வீரர்கள் மனோதிடத்தை குலைக்க சீனா செய்யும் வேலையை பாருங்க

இதற்கு முன்னதாக இவர் வீடியோ வாயிலாக அளித்திருந்த பேட்டியில், ''கொரோனா வைரஸ் துவக்கம் குறித்த தகவல்கள் என்னிடம் உள்ளது. வைரஸ் குறித்து சீன அதிகாரிகளிடம் நான் தகவலை பகிர்ந்து கொண்டேன். ஆனால், அவர்கள் எனது பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை.

இயற்கையாக இந்த வைரஸ் உருவாகவில்லை. மனிதனின் விரல்களைப் போன்று மரபணு வரிசையில் உருவானது. இதன் அடிப்படையில் இதை கண்டறியலாம். இந்த சாட்சியத்தை வைத்து சீனாவின் லேப்பில் இருந்துதான் இந்த வைரஸ் வெளியானது என்பதை உறுதிபடுத்துவேன்'' என்று தெரிவித்து இருந்தார்.

தற்போது இவர் அமெரிக்காவில் இருக்கிறார். சீனாவில் தன்னை அதிகாரிகள் மிரட்டியதால் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து இருப்பதாக முன்பு இவர் தெரிவித்து இருந்தார்.

English summary
Twitter account of Chinese Virologist Li-Meng Yan suspended
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X