டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவுக்கு எதிரான கார்ட்டூன் வெளியிட்டதால்.. அமுல் டுவிட்டர் அக்கவுண்ட் ஒரு நாள் முழுக்க முடக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: சீன நாட்டு பொருட்களுக்கு எதிராக கார்ட்டூன் வெளியிட்டதாக கூறி, இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல் பால் நிறுவன அக்கவுண்டை முடக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி முகாமிட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ராணுவ தலைமை மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. முன்னதாக, கடந்த 3ம் தேதி மாலை, அமுல் நிறுவனம் டுவிட்டரில் ஒரு கார்டூன் வெளியிட்டு இருந்தது.

அதில் அமுல் நிறுவனத்தின் பிரபலமான, அந்த சிறுமி படம், ஒரு கையால் டிராகன் படத்தை நோக்கி கையை நீட்டியபடி. Exit the Dragon? என்று கூறுவதுபோல வாசகம் இடம்பெற்றிருந்தது.

டிரம்ப் போட்ட இரண்டு டுவிட்டும் பொய்யானது.. முதல் முறையாக அடையாளப்படுத்திய டுவிட்டர் டிரம்ப் போட்ட இரண்டு டுவிட்டும் பொய்யானது.. முதல் முறையாக அடையாளப்படுத்திய டுவிட்டர்

டிராகன் படம்

டிராகன் படம்

டிராகன் படத்துக்குப் பின்னால் டிக் டாக் செயலி படமும் இடம்பெற்றிருந்தது. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற ஒரு கார்ட்டூன் அமுல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அமுல் நிறுவனம் பல்வேறு விவகாரங்களிலும் கவனம் ஈர்க்கும் வகையில் முன்பும் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. எனவே அதன் டுவிட்டர் அக்கவுண்டுக்கு நிறைய ஃபாலோவர்கள் உண்டு.

எச்சரிக்கை

எச்சரிக்கை

கடந்த 3ம் தேதி இந்த கார்டூன் வெளியிடப்பட்ட நிலையில், 4ம் தேதி மாலை அமுல் டுவிட்டர் கணக்கை முடக்கியது டுவிட்டர் நிறுவனம். அமுல் ட்விட்டர் கணக்கை பார்க்க சென்ற அதன் நெட்டிசன்களுக்கு இந்த அக்கவுண்ட் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது என்ற வார்த்தை மிளிர்ந்தது. சில வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள் தென்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, பாதுகாப்பு எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றது.

சீன பொருட்களை புறக்கணிப்போம்

சீன பொருட்களை புறக்கணிப்போம்

இதையடுத்து அமுல் நிறுவனம், டுவிட்டர் அமைப்பை கேட்டுக் கொண்ட பிறகு ஜூலை 5ஆம் தேதி காலை முதல் பழையபடி அந்த அக்கவுண்ட் செயல்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பொருள்படும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டதால் தான் இதுபோன்ற நடவடிக்கையை ட்விட்டர் நிறுவனம் எடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கூகுளும் இதே வேலைதான்

கூகுளும் இதே வேலைதான்

ஏற்கனவே சீன செல்போன் ஆப்களை நீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு, இந்திய செயலியை கூகுள் பிளே ஸ்டோர் நீக்கிவிட்டது. டிக் டாக் செயலிக்கு எதிராக இந்தியர்கள் பலரும் நெகட்டிவ் கமெண்ட் செய்ததால் அதன் ரேட்டிங் குறைந்தது. அந்த நெகட்டிவ் கமெண்டுகளை கூகுள் பிளே ஸ்டோர் நீக்கம் செய்து விட்டதாகவும் சர்ச்சை உள்ளது. டுவிட்டர் மற்றும் கூகுள் ஆகியவை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் என்றபோதிலும் சீனாவுக்கு விசுவாசமாக நடந்து கொண்டிருப்பதாக இணையதளத்தில் நெட்டிசன்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் டுவிட்டர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். கருத்து சுதந்திரத்தை டுவிட்டர் முடக்குவதாக அவர் கூறி வருகிறார். கருப்பினத்தவர்கள் போராட்டத்திற்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக, டுவிட்டர் கூறியதை, ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சீன பொருட்களை புறக்கணிப்போம் என்று சொல்லுவதை தடுப்பதற்கு ட்விட்டர் நிறுவனத்திற்கு என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஒன்று பிரச்சினை என்றால், மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் ஒன்றாக சேர்ந்து கொள்ளும். விவசாயிகள் அப்படி சேர மாட்டார்கள், என்ற தமிழ் திரைப்படத்தில், வெளியான ஒரு பிரபல வசனம் தான் இந்த நேரத்தில் பலருக்கும் நினைவுக்கு வருகிறது.

English summary
Twitter temporarily restricted the official handle of Indian dairy major Amul over its 'exit the dragon' topical, days ahead of the much-anticipated high-level India-China talks to resolve the Ladakh border dispute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X