டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவது வழக்கு விசாரணையை பாதிக்கிறது.. சிபிஐ வாதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Sonia and manmohan meets Chidambaram

    டெல்லி: ப சிதம்பரம் பெயரில் அடிக்கடி டுவிட்டரில் அவரது குடும்பத்தினர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த டுவிட் பதிவுகள் விசாரணையை பாதிப்பதாக கூறினார்.

    ஐஎஸ்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது 5வது நாளாக நேற்றும் விசாரணை நடந்தது.

    அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், குற்றம்சாட்டப்பட்ட ப சிதம்பரத்துக்கு எதிராக ஆவணங்களும் ஆதாரங்களும் இருக்கிறது. அவரை ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை கலைக்கக் கூடும். எனவே அவரை ஜாமீனில் விடக்கூடாது என்று வாதிட்டார்.

    குரூப் 2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்... தமிழக அரசுக்கு வேல்முருகன் கண்டனம்குரூப் 2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்... தமிழக அரசுக்கு வேல்முருகன் கண்டனம்

    இந்திராணியை சந்தித்துள்ளார்

    இந்திராணியை சந்தித்துள்ளார்

    துஷார் மேத்தா வாதிடுகையில், "குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐஎஸ்எக்ஸ் மீடியா உரிமையாளர் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறி உள்ளார்.. 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் ப.சிதம்பரத்தை சந்தித்ததை சிபிஐ விசாரணையில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். ப சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி சந்தித்தது குறித்து ஓட்டல் ஆவணங்கள் அடிப்படையில் ஆதாரங்கள் இருக்கிறது

    வெளிநாட்டு முதலீடு

    வெளிநாட்டு முதலீடு

    வெளிநாட்டு முதலீடு பெற அன்னிய முதலீடு மேம்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கும் முன்பே ப.சிதம்பரத்தின் அறிவுரை படி இந்திராணி முகர்ஜி கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து உள்ளார்.

    விசாரணையை பாதிக்கிறது

    விசாரணையை பாதிக்கிறது

    தனது குடும்பத்தினர் மூலம் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவது வழக்கின் விசாரணையை பாதிக்கிறது. ப.சிதம்பரம் மிகுந்த செல்வாக்கு மற்றும் பணபலம் உள்ளவர். வேறு நாட்டில் சென்று குடியேற வாய்ப்பு உள்ளது. எம்பியாக உள்ளதால் தான் தப்பிச் செல்லமாட்டேன் என அவர் கூறுவதை ஏற்க முடியாது,

    சிதம்பரமும் தப்பிவிடுவார்

    சிதம்பரமும் தப்பிவிடுவார்

    ஏனெனில் ஏற்கனவே எம்பியாக இருந்த ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் வரை ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்றார். இதையடுத்து விசாரணை நிறைவடைந்ததால், நீதிபதி சுரேஷ்குமார் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

    English summary
    Twitter feeds of ex central minister P Chidambaram affect case investigation: CBI argument on delhi high court
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X