டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ட்வீட்டுக்கு எடிட் பட்டன் தரோம்.. ஆனால் எல்லாரும் "இதை" செய்ய வேண்டும்.. ட்விஸ்ட் வைத்த ட்விட்டர்!

Google Oneindia Tamil News

டெல்லி: மக்கள் அனைவரும் மாஸ்க்குகளை அணிந்தால் ட்விட்டர் பயனாளிகளுக்கு எடிட் பட்டன் கிடைக்கும் என அந்த நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது.

டவிட்டர் சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். அந்த அளவுக்கு சாமானியர்கள் முதல் சரித்திரம் படைத்தவர்கள் வரை ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒரு தகவலை வார்டு கவுன்சிலர் முதல் உலக நாடுகளின் தலைவர்கள், அதிபர்கள் வரை கொண்டு செல்ல பெரிதும் உறுதுணையாக இருப்பது ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களாகும்.

சீனா எதிர்பார்க்காத சிக்கல்.. கல்வானில் பெருக்கெடுக்கும் ஐஸ் வெள்ளம்.. வசமாக சிக்கிய ராணுவ வீரர்கள்!சீனா எதிர்பார்க்காத சிக்கல்.. கல்வானில் பெருக்கெடுக்கும் ஐஸ் வெள்ளம்.. வசமாக சிக்கிய ராணுவ வீரர்கள்!

ட்விட்டரில் பதிவு

ட்விட்டரில் பதிவு

ஒரு கருத்தை பதிவு செய்த அடுத்த நொடியே அந்த கருத்து உலகமெங்கும் பரவுகிறது. இத்தகைய ட்விட்டரில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் இதில் ஒரு பின்னடைவு காணப்படுகிறது. அதாவது இந்த ட்விட்டரில் ஒரு பதிவை போட்டுவிட்டால் அதில் திருத்தம் ஏதும் இருப்பின் அதை எடிட் செய்ய இயலாது. மாறாக அந்த ட்வீட்டையே டெலிட் செய்ய வேண்டும்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

ட்வீட் பதிவிட்ட பின்னர் ஒரு சிறிய எழுத்தைக் கூட மாற்ற முடியாது. இதனால் பல பிரபலங்கள் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து விட்டு எதிர்ப்புகள் எழுந்தால் அந்த ட்வீட்டையே அழிக்கும் நிலைக்கு உள்ளாகிறார்கள். இதனால் ட்விட்டரில் எடிட் ஆப்ஷன் வேண்டும் என நெட்டிசன்கள் ட்விட்டர் நிறுவனத்திடம் கோரி வந்தனர்.

மாஸ்க்

மாஸ்க்

இந்த நிலையில் அண்மையில் எடிட் பட்டன் குறித்து ட்விட்டர் நிறுவனம் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளது. அதில் உங்களுக்கு எடிட் பட்டன் கிடைக்கும். ஆனால் அனைவரும் மாஸ்க் அணிந்தால் மட்டுமே என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கொரோனா காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு ட்விட்டர் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

எடிட் பட்டன்

எடிட் பட்டன்

அது போல் முகக் கவசத்தையும் அணிய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ட்வீட் வைரலானது. இதற்கு 2.2 மில்லியன் லைக்ஸ் மற்றும் 6.26 லட்சம் ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. சிலர் ட்விட்டர் நிறுவனத்தின் ட்வீட்டுக்கு கிண்டல் செய்து பதில் அளித்துள்ளார்கள். இன்னும் சிலர் உலக உருண்டைக்கு முகக் கவசம் அணிவித்து கிண்டல் செய்துள்ளார்கள். இன்னும் சிலர் எடிட் பட்டன் இல்லாததால் ட்விட்டர் மிகவும் சரியாக உள்ளது.

English summary
Twitter says it will introduce the edit button, but it asks everyone to wear mask.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X