டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியே கவலைப்பட்டார்.. மலையாள டிவி சேனல்கள் தடை பற்றி ஜவடேக்கர் அதிரடி பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி கலவரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் செய்தி வெளியிட்ட, இரண்டு மலையாள சேனல்கள் ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது மத்திய அரசு.

Recommended Video

    Asianet Media One Malayalam Channel restored | Prakash Javadekar

    இந்த விஷயத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டதாக, செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

    டெல்லி கலவர செய்திகளை ஒளிபரப்பியதில் விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் என்ற இரு மலையாள, டிவி சேனல்களை 48 மணிநேரம் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டதாக நேற்று இரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    மோசமான நிதி நிலை.. யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க எஸ்பிஐ வங்கி திட்டம்?மோசமான நிதி நிலை.. யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க எஸ்பிஐ வங்கி திட்டம்?

    அறிவிப்பு

    அறிவிப்பு

    செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தில் இருந்து வெளியான அறிக்கையில் இந்த அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து நேற்று இரவு 7.30 மணி முதல் அந்த இரு சேனல்களும் ஒளிபரப்பை தடை செய்ய நேரிட்டது. இரு சேனல்களும் கருப்பு நிறத்தில் திரையை காண்பித்தன. இதற்கு நாடு முழுக்க பெரும் கண்டனங்கள் எழுந்தன. சென்னை பத்திரிக்கையாளர் மன்றமும் கண்டனத்தை பதிவு செய்தது. போராட்டத்தை அறிவித்தனர் பத்திரிக்கையாளர்கள்.

    சுதந்திரம்

    சுதந்திரம்

    இந்நிலையில் அந்த தடையை இன்று காலை விலக்கியுள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக இன்று பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், என்ன நடந்தது என்பது பற்றி உடனடியாக நாங்கள் கண்டறிந்தோம். எனவே உடனடியாக இரண்டு சேனல்கள் ஒளிபரப்புக்கும் அனுமதி வழங்கினோம். ஒரு ஜனநாயக நாட்டில் பத்திரிகை சுதந்திரம் என்பது அவசியம் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்.

    எமெர்ஜென்சி

    எமெர்ஜென்சி

    நாங்கள் எமர்ஜென்சிக்கு எதிராக போராடியவர்கள். எனவே மோடி அரசு பத்திரிகை சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பிரதமர் மோடி இந்த விஷயத்தில் நேரடியாக தனது கவலையை தெரிவித்தார் .இந்த விஷயத்தில் முழு தகவலை அறிந்து கொண்டு, தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்தார்.

    சசி தரூர்

    இதனிடையே, கேரளாவைச் சேர்ந்தவரும், காங்கிரஸ் மூத்த எம்பியுமான சசிதரூர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த மூர்க்கத்தனமான முடிவுக்கு எதிராக பரவலான எதிர்ப்பு குரல் எழுந்ததால், அரசு ஞானம் பெற்றுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். நமது சுதந்திரம் ஒவ்வொரு நாளும் போராட வேண்டி உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    I&B Minister Prakash Javadekar: Two Kerala dailies were banned for 48 hours, we immediately found out what actually happened and therefore immediately we restored the channels. Our basic thought process is that press freedom is absolutely essential for a democratic setup
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X