டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தினகரனுக்கு மேலும் பின்னடைவு.. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கே.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி

இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்குத்தான் சொந்தம் என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்குத்தான்.. டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பால் தினகரனுக்கு மேலும் பின்னடைவு

    டெல்லி: இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்குத்தான் சொந்தம் என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை அதிமுக பயன்படுத்துவது சரிதான், எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இந்த சின்னத்தை பயன்படுத்தலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இரண்டாக உடைந்த அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு மொத்தமாக கழட்டிவிடப்பட்டது.

    இதையடுத்து சசிகலா - தினகரன் தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒன்றாக சேர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதனால் தேர்தல் ஆணையம் இந்த சின்னத்தை முடக்கியது.

    முடக்கம் செய்தனர்

    முடக்கம் செய்தனர்

    2017 மார்ச் மாதம் அந்த சின்னம் முடக்கப்பட்டது. இதனால் தற்காலிகமாக தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னம் கிடைத்தது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மின் கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

    என்ன தீர்ப்பு

    என்ன தீர்ப்பு

    இதன் மீதான வழக்கு 5 மாதங்களுக்கு மேலாக தேர்தல் ஆணையத்தில் நடந்தது. கடைசியாக தேர்தல் ஆணையம் 2017 நவம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பில், இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்குதான் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது.

    டெல்லி ஹைகோர்ட்

    டெல்லி ஹைகோர்ட்

    அதன்பின் டிடிவி தினகரன் தரப்பு ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதில அவர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். அதே சமயம் இந்த இரட்டை இலை சின்னம் கேட்டு டெல்லி ஹைகோர்ட் சென்றார்.

    தீர்ப்பு வழங்கியது

    தீர்ப்பு வழங்கியது

    இதன் மீதான விசாரணை கடந்த 1 வருடமாக நடைபெற்றது. இதில் பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக தினகரன் தரப்பு வாதம் வைத்து இருந்தது. இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா திங்க்ரா செகல் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

    என்ன விவரம்

    என்ன விவரம்

    டெல்லி ஹைகோர்ட் தனது தீர்ப்பில், இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்குத்தான் சொந்தம். இரட்டை இலை சின்னத்தை அதிமுக பயன்படுத்துவது சரிதான், எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இந்த சின்னத்தை பயன்படுத்தலாம். தினகரன், சசிகலாவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க முடியாது என்று ஹைகோர்ட் கூறியுள்ளது.

    தினகரன் பின்னடைவு

    தினகரன் பின்னடைவு

    இது டிடிவி தினகரனுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் இவர் தோல்வி அடைந்தார். குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    TTV Dinakaran vs AIADMK: Who can claim Two Leaves Symbol? Delhi High Court verdict today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X