டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா-அமெரிக்கா உறவு.. விடைபெறும் தூதர் கென்னத் உருக்கமான உரை!

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க இந்திய கூட்டுறவின் குறிக்கோள் மற்றும் சாதனை என்ற தலைப்பில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திரு.கென்னத் ஐ. ஜஸ்டரின் பிரிவுபச்சார விழா பேருரையாற்றினார்.

இதோ அந்த உரையின் ஒரு பகுதி உங்களுக்காக: இனியதொரு அறிமுக உரையாற்றிய சஞ்ஜொய் அவர்களுக்கும், இந்நிகழ்வை நடத்திக்கொடுக்கும் ORFக்கும் நன்றி. இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இன்று எனது பிரிவுபச்சார விழாவில் உரையாற்றுகிறேன். இது என்னுடைய உள்ளார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் வெளிப்படுத்துவதற்கான தருணமாகும்.

U.S. Ambassador to India Kenneth I. Juster gave a farewell address

அமெரிக்க நாட்டின் தூதராக இவ்வுலகிற்கு என்னை அடையாளப்படுத்துவதை மரியாதைக்குரியதாகவும், பொறுப்பானதாகவும் உணர்கிறேன். இதில், இந்தியாவுக்கான அமெரிக்காவின் தூதர் என்பது கூடுதல் சிறப்பானதாகும். எனது பணிக்காலத்தில், கடந்த 3 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்களாக இப்பொறுப்பு வகித்ததை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மன நிறைவானதாகவும் பார்க்கிறேன்.

1893ம் ஆண்டு சிகாகோ நகரில் நடைபெற்ற உலகக் கண்காட்சியில், சர்வ சமயப் பேரவையில் உரையாற்றிய சுவாமி விவேகானந்தர், "அமெரிக்க சகோதர, சகோதரிகளே! எனக்கு நீங்கள் அளித்துள்ள மனம் கனிந்த வரவேற்பால் என் இதயம் பூரிக்கிறது பேச வார்த்தைகளே வராத அளவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் அதே உணர்வை இந்தியாவில் நான் வாழும் போதும் பணியாற்றும்போதும் உணர்ந்தேன்.

அநேக அமெரிக்கர்கள் கருதுவதைப்போல, இந்திய நாகரிகமும், இனிதான மக்களும் அவர்களின் தனித்துவமான கலாச்சாரமும் என் மனதை பார்த்தன 1966-ம் ஆண்டில் எனது பெற்றோர், இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்கள். அப்போது என் தந்தை எடுத்த பகைப்படங்களில் இருந்த மக்களும், இடங்களும் இன்னமும் என் மனதில் நீங்கா பெரியாவுக்கும் இடைப்பட்ட கடந்த 20 ஆண்டுகால உறவில், ஒரு தூதராக, ஒரு தொழில்நுட்பத்துறை அலுவலராக, ஒரு
முதலீட்டாளராக, பல்வேறு லாபநோக்கற்ற அமைப்புகளின் உறுப்பினராக என வெவ்வேறுவிதமான பொறுப்புகளில் இடம்பெற்றிருந்ததை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.

ஒரு தூதராக, இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்துவதில் நேரடியாகப் பங்குபெற்றதை, ஓர் உன்னத அனுபவமாகக் கருதுகிறேன். எனக்கு கிடைத்த இந்த பெரிய வாய்ப்பைப் பயன்படுத்தி இரு நாடுகளின் கூட்டுறவை மேம்படுத்துவதில் என்னாலான முழுமுயற்சியையும் வழங்கினேன். என்மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், ஆதரவளித்ததற்காகவும், அமெரிக்க அதிபருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் பாரதப் பிரதமருக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும். இந்தியா முழுவதுமுள்ள நண்பர்களுக்கும், என்னோடு உரையாடியவர்களுக்கும், உங்கள் அனைவரின் சிறப்பான விருந்தோம்பலுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னோடும், என்போன்ற அமெரிக்க அதிகாரிகளோடும் ஆக்கப்பூர்வமாகவும், கூட்டாகவும், மிகுந்த மதிப்போடும் மரியாதையோடும் நீங்கள் செயலாற்றினீர்கள்.

மேலும், இந்தியாவில் அமெரிக்க நல்லுறவுப் பணியில் ஈடுபட்டு வரும் எங்கள் தூதரகம் எங்களுடைய நான்கு துணைத்தூதரகங்கள் மற்றும் இப்பணியில் உடன் ஒத்துழைக்கும் ஏஜென்ஸிகள் உள்ளிட்ட எனதருமைக் குழுவினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களுடைய கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவான செயல்பாடுகளை பாராட்டுகிறேன். அமெரிக்காவிலுள்ள வெளியுறவுத்துறை அரசாங்கத்தில் அனைவருக்கும் நன்றியைத் உயர்ந்த அந்தஸ்திலுள்ள அலுவலகரீதியிலான வருகையின்போது ஒருங்கிணைந்து மேலும், வெளியுறவுத்துறை, செயலாளர்களின் செயலாளர்கள் பணியாளர் கூட்டுத்தலைமைகளின் மேயர்கள் கலாச்சாரத்துறைத் வருகையின்போதும் பணியாற்றியுள்ளோம்.

முக்கியத்துவத்தையே உணர்த்துகிறது. நம்பிக்கையை பலப்படுத்தும் முயற்சியையும் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட உறவைப்போன்ற மற்றும் நாடுகளுக்குமிடையே விரும்புகிறேன். உள்ளிட்டவற்றில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை ஆராய்வதற்கு மிகப்பெரிய நாடுகளையும்
அமைந்துள்ளது. சர்வதேச நாடுகளையும் ஈர்க்கக்கூடிய மையமாக இம்மண்டலம் வெகுவேகமாக வளர்ந்துவருகிறது.

இம்மண்டலத்தின் டெக்டானிக் பிளேட்டுகளில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக சீனாவின் வளர்ச்சி, கோவிட்-19 நோய்த்தொற்றின் பாதிப்பால் இந்திய பசிபிக் மண்டலத்தின் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. இந்த மண்டலத்துக்கு ஸ்திரத்தன்மையும், வலுவான தலைமையும், ஏனைய நாடுகளின் இறையாண்மையை பாதிக்காத வகையிலான, ஜனநாயகரீதியிலான வளர்ச்சியும் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே இம்மண்டலத்தில் அமைதியையும், செழிப்பையும் வளர்த்தெடுக்க வலுவான ஜனநாயக நாடான இந்தியா, முக்கிய பங்காற்றுகிறது, கடந்த 20 ஆண்டுகளாக உத்திகளை உருவாக்கி செயல்படுத்துவதில் இரு நாடுகளும் முன்னேற்றப்பாதையில் பயணித்தபோதும், கடந்த 4 ஆண்டுகளை, இரு நாடுகளின் உறவின் லட்சியங்களை நிறைவேற்றிய சாதனை ஆண்டுகளாகப் பார்க்க முடிகிறது.

இருதரப்பு நாடுகளின் தலைவர்கள், அரசு அதிகாரிகளின் அர்ப்பணிப்பான, தெளிவான திட்டமிட்ட செயல்பாடுகளால்தான் சமீபத்திய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம், இரு நாட்டு உறவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மட்டுமின்றி, உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்துள்ளது. 2017ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க அரசின் பாதுகாப்பு உத்திகள் உடன்படிக்கையானது தலைமைத்துவ சக்தி, வலுவான ராணுவ உத்தி உருவாக்கத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் பங்களிப்பையும் வரவேற்பதாக உள்ளது.

மூன்றாண்டுகளுக்கு முன்னர், எனது அறிமுக உரையாற்றியபோது, ஜனநாயகத்துக்கு நம் இரு நாடுகளின் அர்ப்பணிப்பு, பொதுநலன் சார்ந்தவற்றில் இருநாடுகளின் விரிவான பார்வை மற்றும் இரு நாட்டு உறவுகளுக்குத் தேவையான பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசினேன் எனது சக இந்திய அதிகாரிகளுடன் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்திய சில லட்சியங்கள் குறித்து மதிப்பாய்வு செய்கிறேன்.

இந்தோயசிபிக் மண்டலமும், ராஜதந்திர ஒத்துழைப்பும்: இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேச ஒழுங்குப்படி இருதரப்பு உறவுகளைத் தக்கவைக்க இணைந்து செயல்படுவதைப் பார்க்கும்போது, இரு நாடுகளுக்கிடையே கடந்த 70 ஆண்டுகளாகவே ராஜதந்திரரீதியிலான ஒத்துழைப்பு இருந்து வருவதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியா அமெரிக்கா இடைப்பட்ட ராஜதந்திர உறவானது, இந்தியா விடுதலையாவதற்கு முன்பே, 1946 நவம்பர் மாதத்தில் தொடங்கியது. இவ்வுலகில் சுதந்திர இந்தியாவாக திகழ்வதற்கான உரிமையைப் பெறுவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கர்கள் ஆதரவளித்தனர். எனினும் கடந்த சில ஆண்டுகளாகத்தான் இரு நாடுகளுக்கு இடைப்பட்ட ராஜதந்திர ஒத்துழைப்பு துரிதமாகியுள்ளது. இதில் பெற்ற ஊக்கத்தினால், 2020, பிப்ரவரி மாதத்தில், இரு நாடுகளுக்கிடைப்பட்ட உறவை 'விரிவான உலகளாவிய உத்தி உருவாக்கல் கூட்டு என்று உருவாக்கினார்கள்

பிடன் பதவியேற்பு நாள்; அமெரிக்கர்களுக்கு சமாதானமான நாளாகும்.. பாப் இசை பாடகர் லேடி காகா சொல்கிறார்! பிடன் பதவியேற்பு நாள்; அமெரிக்கர்களுக்கு சமாதானமான நாளாகும்.. பாப் இசை பாடகர் லேடி காகா சொல்கிறார்!

இது. இந்தோ -பசிபிக் மண்டலத்தில், நமது ராஜதந்திர உறவின்படி, இன்னுமொரு பகிர்வு இலக்காகும் இந்தோ-பசிபிக் மண்டல கருத்துரு உருவாக்கத்துக்கு பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டபோதிலும், கடந்த நான்காண்டுகளில்தான் நம் நாடுகள், இந்த லட்சியத்தை நனவாக்கிக் காட்டியுள்ளன 2017ம் ஆண்டில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த இந்தோ -பசிபிக் மண்டல கருத்துருவில் அமெரிக்காவின் இலக்கை சுதந்திரமான. திறந்த இந்தோ-பசிபிக் பார்வை குறித்து விவரித்தார். இந்த மண்டல நாடுகள், பல்வேறு கலாச்சாரமும், வெவ்வேறு கனவுகளும் கொண்ட, இறையாண்மை மிக்க சுதந்திர நாடுகள், அனைத்து நாடுகளும் அமைதியான முறையிலும், சுதந்திரச் சிந்தனையுடனும் அடுத்தடுத்து வளர்ச்சியடைந்து வருகின்றன என்று குறிப்பிட்டார் 2018ம் ஆண்டு ஷாங்கிரி-லா மாநாட்டில் பேசிய பாரதப்பிரதமர் மோடி, பேசும்போது, சுதந்திர தாராளமய உள்ளடக்கிய இந்தோ -பசிபிக் மண்டலம் என்று அவரது பார்வையைக் குறிப்பிட்டார்.

இந்தோ-பசிபிக் மண்டலக் கருத்துரு, இந்தியா-அமெரிக்க உறவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஏனென்றால் இந்தியப் பெருங்கடலானது தெற்கு ஆசியாவுடனும், பசிபிக் பகுதியுடனும் பிரிக்கமுடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, இந்தோ-பசிபிக் மண்டலத்தின் வளர்ச்சிக்கு மிகமுக்கியமான உந்துதலாக இருக்கும் அதேபோல அமெரிக்கா உள்ளிட்ட இந்தோ-பசிபிக் மண்டல நாடுகளுக்கு இடைப்பட்ட வணிகமும், முதலீடுகளும், இந்தியாவின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியானதொரு உந்துதலை அளிக்கக்கூடும் இந்தியா, அமெரிக்காவுக்கு இடைப்பட்ட உறவைப் பொறுத்தவரை ரெகோரியில் மண்டலத்தில் மிகப்பெரிய மாற்றமோ சவால்களோ எப்படக்கூடிய சிக்கலான தருணங்களில் இந்த மண்டலத்தின் அமைதியையும் வளத்தையும் பாதுகாக்க கூடிய மிக முக்கியமான பங்களிப்பை இந்திய வழங்குவதை நாங்கள் காண்கிறோம்.

பாதுகாப்பும், தீவிரவாத எதிர்ப்பும்:

ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும், இந்தியாவும் அடிப்படையான சில ஒழுங்குமுறைகளின்படி, அமைதி மற்றும் ராஜதந்திரத்தைப் பேணிவருகின்றன. மாபெரும் தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் எண்ணங்கள் இரு நாடுகளாலும் மதிக்கப்படுகின்றன. ஆனால் எல்லோரும் நம்மைப் போலவே இருப்பதில்லை. இராணுவ ஊடுருவல்களையும், அல்லது தற்கொலைப்படைத் தாக்குதல்களையும் சில நாடுகள் செய்துவருகின்றன. அதனால்தான் அமெரிக்காவும் இந்தியாவும் தங்களது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளன. "அடக்குமுறைகளை எதிர்த்து நிற்கும் பலத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்பது சர்தார் வல்லபாய் படேலின் கூற்று. கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களிலிருந்து நமது நாடுகளைப் பாதுகாக்கவும், நமது சொந்த எல்லைகளுக்கு அப்பால் பாதுகாப்பை வழங்கவும், இந்த ஒத்துழைப்பை நாம் பலப்படுத்தியுள்ளோம்

2018ம் ஆண்டில், நம் இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை 2-2 கேபினெட் அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையின் தொடக்கத்தால், இருதரப்பு ராணுவம் மற்றும் பாதுகாப்புக்கூட்டு நடவடிக்கை புதிய நிலையை எட்டியது. இந்தோ-பசிபிக் மண்டலத்தில் அமைதியையும், வளத்தையும் பாதுகாப்பதற்காக இரு நாடுகளுக்கிடைப்பட்ட கூட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், விரிவாக்குவதற்குமான அடிப்படைக் கட்டமைப்பை, இந்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை உருவாக்கியது.

மூன்று முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது, நமது 2+2 அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையின் சாதனைகளில் முக்கியமான ஒன்றாகும்.

பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள்:

நமது உறவின் மூன்றாவது முக்கிய தூணான பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் பற்றி பார்ப்போம். நமது பொருளாதார உறவுக்கு அதிகரித்த ஊக்கத்தை வழங்குவதற்காக, நமது பரந்த உத்திகளைப் பூர்த்தி செய்வதற்காக, நம் இரு நாடுகளையும் வர்த்தகம் மற்றும் முதலீட்டில் வளர்த்தெடுக்க நான் நீண்ட காலமாக வாதிட்டேன் ஒரு வலுவான பொருளாதார உறவினால், பணி மற்றும் வளர்ச்சி அடிப்படையில் நன்மை தருவது மட்டுமல்லாமல், இந்தோ பசிபிக் மண்டலத்துக்கு ஸ்திரத்தன்மையையும் சேர்க்கும். சுருக்கமாக சொன்னால் இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் நாம் கொண்டிருந்த அதே அளவிலான குறிக்கோள்களை, பொருளாதாரத் துறையிலும் பெற வேண்டும்.

கோவிட்-19 தொற்றுக்கு முந்தைய பொருளாதாரப் புள்ளிவிவரங்களில் நான் கவனம் செலுத்தப் போகிறேன். ஏனென்றால், அவை வணிக உறவின் மிகத் துல்லியமான பிரதிநிதித்துவத்தை வழங்குகின்றன கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர். இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு உறவு தொடர்ந்து வளர்ந்து விரிவடைந்தது. 2019 ஆம் ஆண்டில் பொருட்கள் மற்றும் சேவைகளில் இருதரப்பு வர்த்தகம் 146.1 பில்லியன் டாலராக உயர்ந்தது, இது 2001 ஆம் ஆண்டில் நான் பணியாற்றத் தொடங்கியபோது 18.6 பில்லியன் டாலர்களாக இருந்தது. இருவழி சரக்கு வனிகத்தில் 92 பில்லியன் டாலர், சேவைகளின் வர்த்தகம் 54 1 பில்லியன் டாலர் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 16 சதவீதம் அமெரிக்காவிற்கு செல்கிறது அமெரிக்கா இப்போது இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகவும், இந்தியா அமெரிக்காவின் பன்னிரண்டாவது பெரிய பங்காளியாகவும் உள்ளது

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருள்கள் மற்றும் சேவைகளின் வளர்ச்சி காரணமாக, இந்தியாவிலுள்ள நுகர்வோருக்கு அதிகப்படியான வாங்கும் வாய்ப்பு மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பெருக்கம் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உதிரி பாகங்கள் பெருமளவு கிடைத்துள்ளது இதன்மூலம் இந்தியாவும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இணைந்து இந்திய நிறுவனங்களின் போட்டித்திறனை அதிகரித்துள்ளது 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் அமெரிக்காவின் நேரடி முதலீடு 46 பில்லியன் டாவர்களாகக் கணக்கிடப்பட்டாலும், ஒட்டுமொத்த அமெரிக்க முதலீடுகளையும் கணக்கிடும்போது அது மிக அதிகமாக இருக்கும்.

சமீபத்திய ஒவ்வொரு அமெரிக்க நிர்வாகமும், இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் அதன் முன்னோடிகளின் பணியை வெற்றிகரமாகத் தொடர்ந்துவருவது கவனிக்கத்தக்கதாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் நாம் சாதித்ததை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன். அடுத்து வரவுள்ள அமெரிக்க நிர்வாகமும் இதே போக்கைத் தொடருமென்று நான் நம்புகிறேன். இந்த இந்தோ -பசிபிக் மண்டலத்துக்கும், இதில் இந்தியாவுடனான உறவிலும் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. ஏனெனில் நம் இரு நாடுகளின் எதிர்காலமும் பிரிக்கவே இயலாதபடி பிணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வலுவானதொரு உறுதிப்பாடாகும். இது நம் குடிமக்களின் விருப்பமாகும். நம்முடைய பொதுவான ஜனநாயகக் கொள்கைகள், நமக்கிடைப்பட்ட பொதுவிருப்பங்கள் மற்றும் நம் பொருளாதார, வணிக உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளோம்.

நம் அரசியல் நிலையில், உலகளாவிய சக்தியாக இந்தியாவின் உயர்வுபெற அமெரிக்காவின் ஆதரவு தேவையாக உள்ளது. இன்றைய உலகளாவிய சூழலில், இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அமெரிக்காவின் தூதராக, நம் இரு நாடுகளை ஒன்றிணைக்க நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். என்னை அமெரிக்காவின் பிரதிநிதியாக, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் எனக்கு, அன்பு மரியாதை கூடுதல் அரவணைப்பு மற்றும் மிகுந்த தாராள மனப்பான்மையுடன் வரவேற்பளித்ததை நான் எப்போதும் நினைவில் கொள்வேன் அமெரிக்க இந்தியா உறவில் நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம், நம் குறிக்கோளின் விளைவாக நாம் எவ்வளவு சாதித்திருக்கிறோம். இந்த உறவு நம் இரு நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் எவ்வளவு சாதகமாக இருந்துள்ளது என்பதை நினைவூட்டுவதாக அந்த வரவேற்பு இருந்தது.

எனது பதவிக் காலத்தை, இந்தியாவின் நண்பராகவும், ரசிகராகவும் தொடங்கினேன். இந்த மாபெரும் நாட்டைப் பற்றிய எனது அபிமானம் தற்போது மேலும் வளர்ந்துள்ளது. இதுபோன்ற அர்த்தமுள்ள, மனநிறைவான பணியில் ஈடுபடக் கிடைத்த இந்த வாய்ப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவுகூர்வேன் இது நான் மிகவும் ரசித்த பணியாகும். தயவுசெய்து, நான் எப்போதுமே இந்தியாவுக்கு மிகவும் நெருங்கிய, அன்புள்ள தோழன் என்பதைப் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

English summary
U.S. Ambassador to India Kenneth I. Juster gave a farewell address in New Delhi on January 5, 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X