டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ச்சைக்குரிய உபா சட்ட திருத்த மசோதா.. நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது!

புதிய உபா சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய உபா சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பல்வேறு சிக்கல்களை கொண்ட சட்டம் ஆகும். ஏற்கனவே இந்த சட்டம் மூலம் பலர் பழி வாங்கப்படுவதாக புகார் உள்ளது. இதற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

UAPA Amendment bill will be brought up in Rajya Sabha Tomorrow

இந்த நிலையில் இந்த சட்டத்தை மேலும் வலிமைப்படுத்த மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA - உபா சட்டம்) மத்திய அரசு மாற்றம் கொண்டு வருவதற்காக தாக்கல் செய்திருக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஒருவரை தீவிரவாதி அல்லது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று இந்த சட்டம் மூலம் கைது செய்து விசாரிக்கலாம்.இந்த சட்ட திருத்தம் மூலம் என்ஐஏ இனி வரும் காலங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலத்தை, சொத்தை பறிமுதல் செய்யலாம்.

அடுத்த அதிரடி.. உன்னாவ் வன்புணர்வு வழக்கில் விசாரணை நீதிபதியை அறிவித்தது சுப்ரீம் கோர்ட்! அடுத்த அதிரடி.. உன்னாவ் வன்புணர்வு வழக்கில் விசாரணை நீதிபதியை அறிவித்தது சுப்ரீம் கோர்ட்!

அதேபோல் என்ஐஏ அமைப்பிற்கு இந்த புதிய சட்ட திருத்தம் அளப்பரிய பலத்தை வழங்குகிறது என்று புகார் எழுந்துள்ளது. என்ஐஏ அமைப்பிற்கு இந்த மசோதா கட்டற்ற அதிகாரம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கீழ்நிலை ரேங்க் கொண்ட அதிகாரிகள் கூட இதன் மூலம் முக்கிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.

இந்த மசோதா ஏற்கனவே லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு அங்கு நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த நிலையில் நாளை இந்த மசோதா ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக பாஜக கொறடா பாஜக எம்பிக்கள் எல்லோருக்கும் விப் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

பாஜக எம்பிக்கள் எல்லோரும் கண்டிப்பாக நாளை ராஜ்ய சபாவிற்கு வர வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் லோக்சபாவில் வாக்களித்தது. இதனால் இந்த கட்சிகளின் ராஜ்யசபா எம்பிக்களும் மசோதாவிற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

இந்த மசோதாவை அவையிலும் வெளியிலும் தீவிரமாக மதிமுக எம்பி வைகோ எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
UAPA Amendment bill will be brought up in Rajya Sabha Tomorrow: BJP issues Whip notice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X