டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண் கல்வியில் புதிய புரட்சி.. மத்திய அரசின் உடான் திட்டம் செய்த சாதனை!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் உடான் திட்டம் மூலம் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வது அதிகரித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் உடான் திட்டம் மூலம் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வது அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவில் பெண்கள் படிப்பது இத்தனை வருடம் ஆனாலும் கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்கள் அனைவரும் கல்வி அறிவு பெறும் நிலையை உருவாக்குவது மிகவும் கடினமான சவாலான ஒன்றாக உள்ளது.

Udaan: Inspiring girl students and giving wings to their dreams

முக்கியமாக பள்ளிகளில் இருந்து பெண்கள் இடைநிற்பதை தடுக்கவே முடிவதில்லை. இந்த நிலையில் இதை எல்லாம் தடுக்க கொண்டு வரப்பட்ட திட்டம்தான் மத்திய அரசின் உடான் (Udaan) திட்டம்.

சிபிஎஸ்இ போர்டும், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் சேர்ந்து இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் பெண்பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இதன் மூலம் பெண் பிள்ளைகள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் கல்வி கற்க முடிகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் வார இறுதி நாட்களில் இதன் காரணமாக கல்வி கற்க முடிகிறது.

முக்கியமாக பத்தாவது, 11வது, 12வது படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது அவர்கள் கல்லூரி செல்வதை ஊக்குவிக்கிறது.

அறிவியல் மற்றும் கணிதத்தில் அதிக கவனம் செலுத்தும் வகையில் இந்த உடான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு கல்வியில் வளர்ச்சி அடைய பெரிய அளவில் உதவுகிறது.

English summary
The low enrolment of girl students in schools and colleges is a reality in India, especially in the rural areas. Even if the girls attend schools, they drop out after elementary or middle school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X