டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்கும் போது பின்பற்ற வேண்டியவை: யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகள்

Google Oneindia Tamil News

டெல்லி: பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்கும் போது பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து யுஜிசி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு அக்டோபர் 15க்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து மாநிலஅரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

எனினும் கொரோனா அச்சம் காரணாக பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்கும் போது பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து யுஜிசி புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுததிய சீனா.. விசாவுக்கும் கட்டுப்பாடுஇந்தியாவில் இருந்து செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுததிய சீனா.. விசாவுக்கும் கட்டுப்பாடு

ஆறுநாள் வகுப்பு

ஆறுநாள் வகுப்பு

  • இதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகளை எப்போது தொடங்குவது என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யலாம்.
  • ஆறு நாள் வகுப்பு அட்டவணையை பின்பற்றலாம்
  • வகுப்புகளை பகுதி பகுதியாக பிரித்து நடத்தலாம்
  • வகுப்பறையில் உள்ள இடங்களை பொறுத்து 50% மாணவர்கள் சுழற்சி அடிப்படையில் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம்
ஆறு அடிஇடைவெளி

ஆறு அடிஇடைவெளி

  • மாணவர்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்
  • ஆறு அடி சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
  • கைகள் சுத்தமாக இருந்தாலும் சானிடைசர்களை கொண்டு அடிக்கடி கை கழுவ வேண்டும்
  • இருமல் அல்லது தும்மும்போது கட்டாயம் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும்
  • ஒவ்வொருவரும் தங்கள் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க வேண்டும்
  • எந்தவொரு நோயையும் விரைவில் தெரிவிக்க வேண்டும்
  • எச்சில் துப்புவது கட்டாயம் தடை செய்யப்பட வேண்டும்
பாடத்திட்டம் எப்படி

பாடத்திட்டம் எப்படி

கொரோனா ஊடங்கின் போது பயணக் கட்டுப்பாடுகள் அல்லது விசா பிரச்சினைகள் காரணமாக தங்கள் படிப்புகளை மீண்டும் தொடங்க முடியாத சர்வதேச மாணவர்களுக்கு ஒரு திட்டத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும் யுஜிசி, கல்வி நிறுவனங்களைக் கேட்டுள்ளது.

கல்லூரிகள் திறப்பு

கல்லூரிகள் திறப்பு

எந்தவொரு கல்லூரியும் வகுப்பை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு அந்த பகுதியை பாதுகாப்பானதாக (கொரோனா கட்டுப்பாடு இல்லாத பகுதி) மத்திய அல்லது மாநில அரசு அறிவித்திருக்க வேண்டும். அப்படி அறிவிக்கும் போது, எல்லா வழிகாட்டுதல்களும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். இதற்காக மாநில அரசு கடுமையான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். கொரோனாவில் தங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் போதுமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கட்டுப்பாட்டு மண்டத்தில் உள்ளவர்கள்

கட்டுப்பாட்டு மண்டத்தில் உள்ளவர்கள்

கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் கட்டுப்பாடற்ற மண்டலங்களில் மட்டுமே மீண்டும் திறக்கப்பட வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் வாழும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.

English summary
the UGC guidelines for reopening schools and colleges have been released along with the preventative measures that students and teachers would need to follow to protect themselves from Covid-19 when physical classes resume.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X