ரொம்ப நன்றிங்க.. சச்சினை போல உணர்ந்தேன்! பிரதமர் மோடிக்கு தேங்ஸ் சொன்ன போரிஸ் ஜான்சன்..ஏன் தெரியுமா
டெல்லி: இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவில் தனக்கு அளித்த வரவேற்பு குறித்துப் பல தகவல்களைத் தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக நேற்றைய தினம் இந்தியா வந்தார். முதலில் குஜராத் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோசமாகும் இலங்கையின் நிலை - 6 வது மாதமாக உச்சம் தொட்ட பண வீக்கம்... உணவு வீக்கமும் உயர்வு
அங்கு சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அங்குக் காந்தி பற்றிய குறிப்புகள், படங்களை ஆர்வத்துடன் பார்த்துத் தெரிந்து கொண்டார்.

இந்தியாவில் போரிஸ் ஜான்சன்
மேலும், அங்குள்ள கைத்தறி இயந்திரத்தையும் பிரதமர் போரிஸ் ஜான்சன் இயக்கினார். அங்குள்ள வருகை குறிப்பில் போரிஸ் ஜான்சன், "இந்த அசாதாரண மனிதரின் ஆசிரமத்துக்கு வருவதும், எனக்குக் கிடைத்த பாக்கியம்" என எழுதி இருந்தார். இதையடுத்து அவர் இன்றைய தினம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

சச்சினை போல உணர்ந்தேன்
அதன் பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது குஜராத் மாநிலத்தில் தனக்கு அளித்த பிரமாண்ட வரவேற்புக்குப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நன்றி தெரிவித்தார். போரிஸ் ஜான்சன் மேலும் கூறுகையில், "எனக்குப் பிரமாண்ட வரவேற்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி. எல்லா இடங்களிலும் விளம்பரப் போர்டுகளைப் பார்த்தபோது நான் சச்சின் டெண்டுல்கரைப் போலவும், அமிதாப் பச்சனைப் போலவும் உணர்ந்தேன்" என்றார்.

ஜேசிபி தொழிற்சாலை
முன்னதாக நேற்றைய தினம் சப்ரமதி ஆசிரமத்திற்குச் சென்று திரும்பிய பின்னர், போரிஸ் ஜான்சன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், போரிஸ் ஜான்சன் ஆகியோர் அங்கு பஞ்சமஹாலில் உள்ள ஹலோல் பகுதியில் உள்ள ஜேசிபி தொழிற்சாலைக்குச் சென்றார். ஆலையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்த போரிஸ் ஜான்சன், திடீரென அங்கிருந்த புதிய ஜேசிபி வாகனத்தில் ஏறினார். அந்த ஜேசிபி வாகனத்தில் ஏறி அமர்ந்த அவர், உற்சாகமாக கை அசைத்து,போஸ் கொடுத்தார்.

மகாத்மா காந்தி நினைவிடம்
அதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் குஜராத் மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பினார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வியாழன் மாலை போரிஸ் ஜான்சனை வரவேற்றார். இன்று காலை டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குசென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த இந்தப் பயணம் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா பிரிட்டன்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறி உள்ளதால், அந்நாட்டின் வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிற நாடுகள் உடனான வர்த்தகத்தை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இந்தியாவுக்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே வர்த்தகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போரிஸ் ஜான்சனின் இந்த இந்தியப் பயணத்திலும் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் கையெழுத்தானது.