டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியை படாதபாடு படுத்தி பதம்பார்ப்பது பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதாக என்.சி.டி.சி. எனப்படும் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் எச்சரித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய இணையவழி கருத்தரங்கில் என்.சி.டி.சி. இயக்குநர் சுஜீத்குமார் சிங் பங்கேற்று கொரோனா ஆய்வுகள் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டார். அப்போது, டெல்லியில் மொத்தம் 3208 சோதனை மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில் பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 400 பேருக்கு இருப்பதாகவும் இந்தியாவின் உருமாறிய இரட்டை மரபணு வைரஸ் பாதிப்பு 76 பேருக்கும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"அய்யோ".. தொப்பென்று.. நடுரோட்டில் விழுந்த பிணம்.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. ஷாக் வீடியோ!

இருமடங்கு தாக்கம்

இருமடங்கு தாக்கம்

மேலும் மார்ச் 2-வது வாரத்தில் பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 28% ஆக இருந்தது; ஆனால் மார்ச் இறுதி வாரத்தில் இது 50% அதிகரித்ததாகவும் சுஜீத்குமார் சிங் தெரிவித்தார்.

பஞ்சாப், மகாராஷ்டிரா

பஞ்சாப், மகாராஷ்டிரா

இது தொடர்பாக சுஜீத்குமார் சிங் மேலும் கூறியதாவது: பஞ்சாப் மாநிலத்திலும் பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் உருமாறிய இரட்டை மரபணு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

சோதனைகளும் ஆய்வுகளும்

சோதனைகளும் ஆய்வுகளும்

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசிலின் உருமாறி கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின் மொத்தம் 15,133 சோதனைகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன. இதில் 1,735 உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

மகாராஷ்டிராவில் பாதிப்பு

மகாராஷ்டிராவில் பாதிப்பு

மகாராஷ்டிராவில் 1770 சோதனைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 64 பேருக்கு இருந்தது தெரியவந்தது. டெல்லியில் 23 பேருக்கு தென்னாப்பிரிக்கா உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் நிலவரம்

பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் நிலவரம்

பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 551 பேருக்கு பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பும் தெலுங்கானாவில் இது 170 ஆகவும் இருந்தது. ஆனால் மேற்கு வங்கத்தில் தென்னாப்பிரிக்காவின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 124 ஆகவும் பிரிட்டன் வைரஸ் பாதிப்பு 40 ஆகவும் இருந்தது. இவ்வாறு சுஜீத்குமார் சிங் கூறினார்.

English summary
According to the NCDC Reports, 400 cases of the UK strain and 76 of the Indian double mutant were found in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X