டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி சர்காரில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு... ஷாக் ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மையின் சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2017-18 ஆம் நிதியாண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாக, இந்தாண்டின் தொடக்கத்தில் செய்திகள் வெளியாகின.

தேர்தல் நேரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையிலெடுத்து பிரச்சாரம் செய்தனர். ஆனால், வேலைவாய்ப்பின்மை குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.

ரமலான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் ரன்மதான்.. சவால் ஓட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரே தமிழர் ரமலான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் ரன்மதான்.. சவால் ஓட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரே தமிழர்

வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

இந்தநிலையில், வெளியிடப்பட்டுள்ள தகவலில், நாட்டில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை சதவீதம் 6.1 ஆக உயர்ந்துள்ளது. இது நகரங்களில் 7.8 சதவீதமாகவும், கிராமங்களில் 5.3 சதவீதமாகவும் உள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத, வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு சதவீதம் ஆகும்.

சி.எம்.ஐ.இ ஆய்வறிக்கை

சி.எம்.ஐ.இ ஆய்வறிக்கை

நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 40 கோடியாக உள்ளதாகவும், ஆனால் 2018 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 40.60 லட்சமாக இருந்ததாகவும் சி.எம்.ஐ.இ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விளக்கம்

மத்திய அரசு விளக்கம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம் உள்ளிட்டவைகளால் 2018ம் ஆண்டில் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருப்பதாகவும் அந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதேநேரம் பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட வேலையிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் தங்களிடம் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பின்மை சதவீதம்

வேலைவாய்ப்பின்மை சதவீதம்

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையில் நடத்திய ஆய்வில் வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக உள்ளது. 1972-1973 நிதியாண்டுக்கு பிறகு இதுவே அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர். 2011-2012 நிதியாண்டில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை சதவீதம் 2.2 சதவீதமாக இருந்தது.

English summary
Central Statistics Department Report that Unemployment Percentage increase in the last 45 years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X