டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செம எதிர்பார்ப்பு.. பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்.. எத்தனை மணிக்கு துவக்கம்? எப்படி பார்க்கலாம்?

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ம் நிதியாண்டு பட்ஜெட்டை பிப்ரவரி 1 (திங்கட்கிழமை) தாக்கல் செய்ய உள்ளார்.

Recommended Video

    பெரிய எதிர்ப்புடன் தொடங்கும் Budget 2021 | Oneindia Tamil

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) அரசில் நிர்மலா சீதாராமன் தனது மூன்றாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

    Union Budget 2021: Know When and Where to Watch the Session

    மத்திய பட்ஜெட் இந்த முறை முன்பை விட வித்தியாசமாக இருக்கும் என்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே கூறியுள்ளார்.

    ஏனெனில் மோடி அரசு முடங்கியுள்ள இந்திய பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

    துணை நிதியமைச்சர், அனுராக் சிங் தாக்கூர் மற்றும் நிதி அமைச்சகத்தின் பல மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் ஜனவரி 23 சனிக்கிழமையன்று 'அல்வா விழா' என்ற சம்பிரதாய விழாவில் நிதியமைச்சர் பங்கேற்றார்.

    இந்த ஆண்டு, மத்திய பட்ஜெட் 2021-22 முதல் முறையாக காகிதமற்ற வடிவத்தில் இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    இதனிடையே, பொருளாதார ஆய்வு அறிக்கை ஜனவரி 29 வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் இதையும் தாக்கல் செய்வார்.

    மத்திய பட்ஜெட் 2021ஐ எங்கே, எப்படி பார்ப்பது?: கொரோனா காலத்தில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் என்பதால் அதன் அறிவிப்புகள் பற்றிய அறி, மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    லோக்சபா தொலைக்காட்சி, பிஐபி, தூர்தர்ஷன், மாநிலங்களவை டிவி உள்ளிட்ட பல தளங்களில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்பை நீங்கள் காணலாம். அதற்கான அந்தந்த யூடியூப் சேனல்கள் மற்றும் ட்விட்டர் கணக்குகளையும் நீங்கள் பார்வையிடலாம். பட்ஜெட் உரை பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தொடங்க உள்ளது.

    English summary
    Union Finance Minister Nirmala Sitharaman is all set to present the Budget 2021 on February 1(Monday).
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X