டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- மத்திய அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்

    டெல்லி: மகாராஷ்டிராவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க இயலாத நிலையில் மத்திய அரசின் பரிந்துரைப்படி ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

    மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைத்த போதும் அக்கட்சி அதை ஏற்கவில்லை. சிவசேனாவைப் பொறுத்தவரையில் 3 நாட்கள் கால அவகாசம் கேட்டிருந்தது.

    Presidents rule imposed in Maharashtra

    இதை ஆளுநர் நிராகரித்திருந்தார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்திருந்தார்.

    அக்கட்சிக்கு இன்று இரவு 8.30 மணிவரை அவகாசம் தரப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென மகாராஷ்டிராவில் சட்டப்படி ஆட்சி அமைக்க முடியாத நிலை இருப்பதால் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைப்பதாக ஆளுநர் கோஷ்யாரி தெரிவித்திருந்தார்.

    Presidents rule imposed in Maharashtra

    இதனிடையே ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. பின்னர் இதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியது.

    ஆர்டிஐ கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வருமா?.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!ஆர்டிஐ கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வருமா?.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

    தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்ததையடுத்து மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளது.

    English summary
    Sources said that Union Cabinet recommends President's rule in Maharashtra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X