டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புது வகை கொரோனா...விவசாயிகள் போராட்டம்....பரபரப்பான சூழ்நிலையில்...இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!

Google Oneindia Tamil News

டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் தொடர்ந்து நடைபெறும் விவசாயிகள் போராட்டம். இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதிய வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கபட உள்ளது.

Union cabinet to meet on today

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கபடவில்லை .

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி மூலம் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

நாட்டில் எவரும்... மதம் காரணமாக... பின்னுக்கு தள்ளப்பட மாட்டார்கள்... பிரதமர் மோடி பளிச் பேச்சு!நாட்டில் எவரும்... மதம் காரணமாக... பின்னுக்கு தள்ளப்பட மாட்டார்கள்... பிரதமர் மோடி பளிச் பேச்சு!

தலைநகரில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ளன.இந்த விவசாயிகள் போராட்டம் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் குறைந்து சற்று ஆறுதல் அளித்தாலும், இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தலையெடுத்து மக்களை பயமுறுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் இந்தியாவில் இதுவரை யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனாலும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் இந்த கூட்டத்த்தில் ஆலோசனை செய்யப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
The Union Cabinet meeting chaired by Prime Minister Narendra Modi is being held in the capital Delhi today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X