டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாவ்.. 1 லட்சம் டெபாசிட்டுக்கு வட்டி ரூ.39,625 கிடைக்கும்.. அறிமுகமானது தேசிய நேர சேமிப்பு திட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: அதிக வட்டி ஈட்டக்கூடிய, தேசிய சேமிப்பு நேர வைப்பு (TD-டிடி) திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

2019, டிசம்பர் 12ம் தேதியிட்டு தேசிய சேமிப்பு நேர வைப்புத் திட்டம், குறித்து, நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் நான்கு வகையான நேர வைப்பு (அல்லது நிலையான வைப்பு) கணக்குகளுக்கு வழங்குகிறது - ஒரு வருட கணக்கு, இரண்டு ஆண்டு கணக்கு, மூன்று ஆண்டு கணக்கு மற்றும் ஐந்தாண்டு கணக்கு.

இந்த கணக்குகளில் வைப்பு முறையே ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு செய்யப்படலாம்.

Union government notifies new Time Deposit Scheme 2019

டி.டி. கணக்கை 18 வயது தாண்டியவர்கள் தனிக்கணக்காகவும், மூன்று பேர் ஜாயின்ட் கணக்காக துவங்க முடியும், 10 வயதுக்குக் குறைவான மைனர் சார்பாக ஒரு பாதுகாவலர் கணக்கு துவக்க முடியும். ஒரு நபர் தனது பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட டிடி கணக்கை வைத்திருக்கலாம் அல்லது மற்றொருவருடன் கூட்டாக வைக்க முடியும்.

ஒரு TD கணக்கிற்கு, குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ .1000. அதிகபட்ச வைப்பு வரம்பு இல்லை. ரூ .100 மடங்குகளில் எந்த தொகையும் டிடி கணக்கில் டெபாசிட் செய்யப்படலாம்.

நேர வைப்பு வட்டி கணக்கீடு இப்படித்தான் இருக்கிறது:

நேர வைப்பு கணக்குகளின் நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் (ஆண்டுக்கு):

1 ஆண்டு - 6.9%
2 ஆண்டு - 6.9%
3 ஆண்டு - 6.9%
5 ஆண்டு - 7.7%

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம், டெபாசிட் தொகைக்கு கிடைக்கும் வருடாந்திர வட்டியை பெறாமல் கணக்கிலேயே போட்டு வைத்தாலும், அதற்கு கூடுதல் வட்டி தரப்படாது.

இப்போது ஒரு உதாரணம் பார்ப்போம்: 5 ஆண்டுக்கான டிடி கணக்கில் ஒருவர் ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்கிறார் என வைத்துக் கொள்வோம். மொத்தமாக ரூ .7925 × 5 = ரூ.39,625. ஐந்து ஆண்டுகளில் நீங்கள் வட்டியாக ஈட்டக்கூடிய தொகை இது. ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வட்டியை எடுத்து, நீங்கள் வேறு ஏதாவது முதலீட்டு திட்டத்திலும் டெபாசிட் செய்து சம்பாதிக்கலாம்.

முன்கூட்டியே திரும்பப் பெறுதல்: வைப்புத் தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவேளை 5 ஆண்டு கால வைப்பு கணக்கு முன்கூட்டியே, மூடப்பட்டால், வட்டி கணக்கீடு என்பது, மூன்று ஆண்டு, நேர வைப்பு கணக்கிற்கான 6.9 சதவீதமாகத்தான் எடுக்கப்பட்டு, அதற்குரிய வட்டித் தொகைதான் கொடுக்கப்படும்.

English summary
Union govt notifies new Time Deposit Scheme 2019, as one can Earn Rs 39,625 interest on Rs 1 lakh in 5 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X