டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி திருவிழா.. முதல் நாளில் 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி.. மத்திய அரசு தகவல்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த கொரோனா தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் 27 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கும், கொரோனா சிகிச்சை பெற மக்களுக்கு உதவுமாறும் மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆக்சிஜன் பெட் தட்டுப்பாடு.. ரெம்டிசிவிர் மருந்து இல்லை.. டாக்டர்கள் போராட்டம்.. எங்க தெரியுமா?ஆக்சிஜன் பெட் தட்டுப்பாடு.. ரெம்டிசிவிர் மருந்து இல்லை.. டாக்டர்கள் போராட்டம்.. எங்க தெரியுமா?

கொரோனா ஆட்டம்

கொரோனா ஆட்டம்

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை கடுமையாக வீசி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 80% பாதிப்புகள் உள்ளன. கொரோனா தொற்றை தடுக்க தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

இது ஒருபுறம் இருக்க கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கும், அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி திருவிழா

தடுப்பூசி திருவிழா

கொரோனா பரவலை தடுக்க 11-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா (டிக்கா உட்சவ்) கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கும், கொரோனா சிகிச்சை பெற மக்களுக்கு உதவுமாறும் முக கவசங்கள் அணிய வேண்டும் என்றும், முக கவசங்கள் அணிய மற்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

27 லட்சம் பேருக்கு தடுப்பூசி

27 லட்சம் பேருக்கு தடுப்பூசி

பிரதமர் கூறியபடி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியது. தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் ஒரு நாள் மட்டும் இரவு 8 மணி நிலவரப்படி 27 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

English summary
The Union Ministry of Health has said that more than 27 lakh people have been vaccinated on the first day of the corona vaccination festival announced by Prime Minister Narendra Modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X