டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லையில் நீடிக்கும் பதற்றம்: லடாக் யூனியன் பிரதேச பிரதிநிதிகளுடன் அமித்ஷா ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் கிழக்கு எல்லையில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகளால் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் லடாக் யூனியன் பிரதேச பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

லடாக் கிழக்கு பகுதியில் சீனா பல்வேறு கட்ட ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த முயற்சிகளை நமது ராணுவ வீரர்கள் முறியடித்து வருகின்றனர்.

Union Home Minister Amit Shah meets Ladakh representatives

எல்லை பதற்றத்தை தணிப்பது தொடர்பாக சீனாவுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இதனிடையே லடாக் யூனியன் பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். முன்னாள் எம்.பிக்கள் துப்சான் சேவாங், திக்ஸி ரின்போச்சே, முன்னாள் அமைச்சர் செரிங் டோர்ஜாய் லக்ரூக் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

நமது ராணுவ வீரர்களின் தைரியத்தை உலகம் கண்டது.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்' குறித்து நினைவு கூர்ந்த மோடி நமது ராணுவ வீரர்களின் தைரியத்தை உலகம் கண்டது.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்' குறித்து நினைவு கூர்ந்த மோடி

இந்த சந்திப்பின் போது லடாக் யூனியன் பிரதேசத்துக்காக கோரிக்கைகளை பிரதிநிதிகள் முன்வைத்தனர். இவற்றை பரிசீலிப்பதாக அமித்ஷா உறுதி அளித்தார்.

English summary
Union Home Minister Amit Shah met public representatives of Ladakh and discussed with them issues relating to the union territory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X