டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயரும் கொரோனா.. கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.. அதிரடி!

Google Oneindia Tamil News

புதுடெல்லி: நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் தொற்று உள்ள பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

குளிர் காலம், பண்டிகை காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மக்கள் அனைவருக்கும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா - இன்று எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா - இன்று எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா

2-வது அலையா?

2-வது அலையா?

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்தாலும், தலைநகர் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் 2-வது அலை வீசுவது போல் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்கள் இரவு நேர கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

கட்டுப்பாடுகள் விதிப்பு

கட்டுப்பாடுகள் விதிப்பு

இவ்வாறு கொரோனா பதிப்பில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளூர் மட்டத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு மத்திய உள்துறை அமைசசகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுளளது. கண்காணிப்பு, கட்டுப்பாடு, என்பதை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்ட இந்த வழிகாட்டு முறைகளை வரிசையாக பார்க்கலாம்.

இரவு நேர ஊரடங்குக்கு எஸ்

இரவு நேர ஊரடங்குக்கு எஸ்

1.மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநிலம், மாவட்ட, வட்ட, உள்ளூர் அளவில் எந்த வித ஊரடங்கும் பிறப்பிக்க கூடாது. அதே வேளையில் கொரோனா சூழலுக்கு தகுந்தபடி இரவு நேர ஊரடங்கை பிறப்பித்து கொள்ளலாம்.

2. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு முறைகளை , மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் மக்களிடம் முறையாக கடைபிடிக்க செய்கிறார்களா என்பதை அந்தந்த மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

பட்டியல் அவசியம்

பட்டியல் அவசியம்

3. கட்டுப்பாட்டு மண்டலங்களின் பட்டியல் அந்தந்த மாநில, மாவட்ட இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்.அது மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பகிரப்படும்.

4. கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்படும்.

வீடு, வீடாக பரிசோதனை

வீடு, வீடாக பரிசோதனை

5. மருத்துவ அவசர நிலை, அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தவிர அந்த பகுதிகளில் மக்கள் தேவையில்லாமல் நடமாட்டம் தவிர்க்கப்பட வேண்டும்.
6. கட்டுப்பாட்டு பகுதிகளுக்குவீடு, வீடாக பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறையின்படி பரிசோதனை செய்ய வேண்டும்.
7. கொரோனா நோயாளிகளை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல், அவர்களை தீவிரமாக கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும்.அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் விரைவாக கண்டறிய வேண்டும்.

விழிப்புணர்வு செய்யுங்க

விழிப்புணர்வு செய்யுங்க

8. தொற்று பாதித்தவர்களை அவர்களின் வீடுகளில் தனிமைபடுத்தி, அரசு வழிகாட்டுதல் முறையில் சிகிசை மேற்கொள்ளலாம்.
9. முக்கியமாக கொரோனா குறித்து அனைத்து விதங்களிலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நீச்சல் குளத்துக்கு அனுமதி

நீச்சல் குளத்துக்கு அனுமதி

கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர, மற்ற இடங்களுக்கு கீழ்கண்ட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.

1. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியின்பேரில் சர்வதேச விமான பயணம்
2. தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம்.
3. நீச்சல் குளங்களில் நீச்சல் வீரர்கள் மட்டும் பயிற்சி மேற்கொள்ளலாம். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.
4. சமுக, மதம் சார்ந்த கூட்டங்கள், விளையாட்டு, கல்வி, பொழுது போக்கு கூட்டங்கள் நடைபெறும் அரங்குகளில் 50 சதவீதம் ஆட்கள் மட்டுமே இருக்க வேண்டும். 2௦௦ பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.இருப்பினும் கரோனா சூழலை பொறுத்து மாநில அரசுகள் இந்த கூட்டத்த்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து கொள்ளலாம்.

ஜாலியா பயணிக்கலாம்

ஜாலியா பயணிக்கலாம்

5. மாநிலங்கள், மாவட்டங்கள் இடையே பயணிக்க எந்த பயண கட்டுப்பாடும் கிடையாது. இதற்கு அனுமதியும் தேவை இல்லை.
6. ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

English summary
The Union Home Ministry has issued guidelines to be followed in areas with Contaiment areas. it has allowed some activity in areas other than the control areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X