இந்த பேப்பர் விளம்பரத்தை பார்த்தீங்களா.. வெடித்த சர்ச்சை.. மத்திய அமைச்சர் வார்னிங்
டெல்லி: பொருளாதார ஆலோசகர் ரச்னா ரனாடே குறித்த விளம்பரம் நாளிதழ் முதல் பக்கத்தில் முழு பக்கமாக வெளியானது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரசு முத்திரைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பிரபல பொருளாதார ஆலோசகராக இருப்பவர் ரச்னா ரனாடே. இவரது படத்துடன் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சார விளம்பரம் பல நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வெளியானது. உண்மையான பொருளாதார அறிஞர்களை மட்டும் நம்புங்கள் என்ற தலைப்புடன் அந்த விளம்பரம் இடம்பெற்று இருந்தது.

அதில், "உண்மையான பொருளாதார ஆலோசகர்களை போல் போலியான பொருளாதார ஆலோசகர்களும் இணையத்தில் உள்ளார்கள். இருவருக்கும் இடையிலான வித்தியாசத்தை அறிவது சற்று கடினமான ஒன்றாகும். எனவே தன்னை தானே பொருளாதார அறிஞர் என்று சொல்பவரை நம்புவதற்கு முன் அவரை பற்றி அறிந்துகொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டு ஒரு கியூ ஆர் கோடும் வழங்கப்பட்டு இருந்தது.
அதை ஸ்கேன் செய்தால், இது குறித்து அதிகம் தெரிந்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த விளம்பர பக்கத்தின் கடைசியில் பொது நலன் கருதி வெளியிடப்படுவதாக குறிப்பிட்டு யூடியூப், மத்திய எலெக்டிரானிஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை முத்திரை, ஸ்டே சேஃப் ஆன்லைன் முத்திரை மற்றும் ஜி20 முத்திரை அச்சிடப்பட்டு இருந்தது.
இதனை படம் பிடித்து பலரும் மத்திய அரசிடம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் கேள்வி எழுப்பி இருந்தார்கள். குறிப்பாக 1992 ஆம் ஆண்டில் இந்தியாவையே அதிர வைத்த ஹர்ஷத் மேத்தாவின் இந்திய பங்குச்சந்தை ஊழலை நாட்டிற்கு அம்பலப்படுத்திய பத்மஸ்ரீ விருதுபெற்ற பத்திரிகையாளர் சுசிதா தலாலும் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
அதில், "அதில் ஜி20யும் இந்திய எலெக்டிரானிஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையும், தனிநபர்களை நம்பிக்கையானர்கள் என்று அங்கீகரிக்கின்றதா? இது எளிமையான விசயம் அல்லவா? ஆனால், பதிவு செய்யப்பட்ட பொருளாதார ஆலோசகர்களோ ரூ.3000 செலுத்தி செபியிடம் அனுமதி பெற வேண்டும். இது என் நாடு!" என்று பதிவிட்டு இருந்தார்.
இது தொடர்பாக மத்திய எலெக்டிரானிஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்து இருக்கும் விளக்கத்தில், "விளம்பரங்களில் அரசு முத்திரைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். சமூக வலைதள பதிவுகளில் அரசு முத்திரைகளை பயன்படுத்துவதாலேயே அவரை அரசு அங்கீகரித்துவிட்டதாக அர்த்தம் இல்லை.
ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது எந்த தனி நபரையோ, அல்லது சமூக வலைதள பக்கத்தையோ அரசு அங்கீகரிப்பதாக அர்த்தம் ஆகாது. மத்திய எலெக்டிரானிஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பாதுகாப்பான நம்பிக்கையான இணைய பயன்பாடு குறித்து டிஜிட்டல் தளங்களில் விழிப்புணர்வு செய்வதை ஊக்குவிக்கிறது.
Just to be very clear - this is not an endorsement of any person or any social media platform. @suchetadalal @GoI_MeitY encourages all digital platforms to create awareness of Safe&Trust And Accountable #Internet and is supportive of all genuine campaigns/advocacy for this but… https://t.co/WqfcGPLeXu
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) June 26, 2023
ஆனால், இதுபோன்ற விளம்பரங்கள் என்பது எங்களால் அங்கீகரிக்கப்பட்டது இல்லை. இதுபோன்ற விளம்பரங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற தனியார் தளங்களின் பரப்புரைகளில் அரசின் முத்திரைகளை கவனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications