டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பலவீனமாக உடல்நிலை.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா இருப்பது உறுதி

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 50லட்சத்தை கடந்துள்ளது. தினசரி பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்துள்ளது.உயிரிழப்பு எண்ணிக்கையும் 1200ஐ தாண்டி உள்ளது. கெரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநில முதல்வர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட பலரும் தொற்றால் பாதிக்கப்படுவது அதிகமாகி வருகிறது. அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் இதேபோல் அமைச்சர் தர்மேந்தி பிரதானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

Union Minister Nitin Gadkari Tests Coronavirus Positive

இதேபோல் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா உள்பட பலர் பாதிக்கப்பட்டனர். ப ல்வேறு மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டனர்.

இநிநிலையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ''நான் உடல் பலவீனமாக உணர்ந்ததை தொடர்ந்து வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரை அணுகினேன். கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர்... சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு... கொரோனா தொற்று உறுதி!!பாஜக மூத்த தலைவர்... சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு... கொரோனா தொற்று உறுதி!!

அனைவரின் ஆசிகளுடன் நான் ஆரோக்கியமாக உள்ளேன். இருப்பினும் பிறரது பாதுகாப்புக்காக, நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்." என்று கூறியுள்ளார்.

கட்கரி தனது இரண்டாவது ட்வீட்டில், "என்னுடன் தொடர்பிலிருந்த அனைவருமே கவனமாக இருக்க வேண்டும், நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்பாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்கரிக்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட ஏழு மத்திய அமைச்சர்களும், 20க்கும் மேற்பட்ட எம்பிக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Union minister Nitin Gadkari tweeted this evening that he has tested positive for coronavirus, which has so far infected more than 50 lakh people in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X