டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திகாரில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளே.. ஜாமீன் நிபந்தனைகளை மீறிய ப. சிதம்பரம்.. மத்திய அமைச்சர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Govt turned out to be incompetent manager of economy P Chidambaram

    டெல்லி: திகார் சிறையிலிருந்து வெளியே வந்த அடுத்த நாளே ஜாமீன் நிபந்தனைகளை ப சிதம்பரம் மீறிவிட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புகார் கூறியுள்ளார்.

    முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப சிதம்பரம் திகார் சிறையிலிருந்து வெளியே வந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பொருளாதாரம் குறித்தும் பெண்கள் மீதான பலாத்காரங்கள், ஜிடிபி உள்ளிட்ட விவகாரங்களை முன் வைத்தார்.

    மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் அவர் கூறுகையில் அமைச்சராக இருந்த போது என்னுடைய ஆவணங்கள் மற்றும் எனது மனசாட்சி தெளிவாகவும் சுத்தமாகவும் உள்ளது. இது என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கும் என்னுடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் என்னை தொடர்பு கொண்ட தொழில் துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றாகவே தெரியும் என தெரிவித்தார்.

    பிரகாஷ் ஜாவடேகர்

    இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜாமீனிலிருந்து வெளியே வந்த அடுத்த நாளே ப சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டார்.

    சரியாகவே உள்ளனர்

    சரியாகவே உள்ளனர்

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு குறித்த எந்தவித கருத்தையும் ஊடகத்த்துக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்பது நிபந்தனை ஜாமீனில் ஒன்றாகும். அவ்வாறு இருக்கையில் சிதம்பரமோ அமைச்சராக இருந்த போது தனது கோப்புகள் அனைத்தும் சரியாகவே இருந்தன என தெரிவித்துள்ளார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிணை தொகை

    பிணை தொகை

    ஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத் துறை வழக்கில் ப சிதம்பரத்திற்கு நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதில் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது, ரூ 2 லட்சத்தை பிணைத் தொகையாக செலுத்த வேண்டும்.

    அறிக்கை

    அறிக்கை

    சாட்சிகளை கலைக்கவோ ஆதாரங்களை அழிக்கக் கூடாது. சாட்சியகங்களை கலைக்க கூடாது. ப சிதம்பரம் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். ஐஎன்எக்ஸ் மீடியா குறித்து சிதம்பரம் பேட்டி அளிக்கவோ அறிக்கை அளிக்கவோ கூடாது.

    நிபந்தனைகளை

    நிபந்தனைகளை

    வழக்கின் விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை அளித்தது. இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் என பெயர் குறிப்பிடாமல் ப சிதம்பரம் பேசியுள்ளது குறிப்பிடக்கதக்கது.

    English summary
    Union Minister Prakash Javadekar says that Chidambaram has violated his bail conditions on the very first day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X