டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடும்ப அரசியல் வேண்டாம்.. என் மகனுக்கு சீட் கிடைச்சாச்சு.. பதவி விலகிய மத்திய அமைச்சர்.. சபாஷ்!

Google Oneindia Tamil News

டெல்லி: மகனுக்கு சீட் கிடைத்துவிட்டது. இனி நான் பதவி விலகிக் கொள்கிறேன் என மத்திய பிரேந்திர சிங் ராஜினாமா செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உருக்குத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் பிரேந்திர சிங். ஹரியானாவை சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவரான இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

ஹரியானாவில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், அமைச்சரவை மாற்றத்தின் போது உருக்குத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் பிரேந்திர சிங்கின் மகன் பிரிஜேந்திர சிங்குக்கு ஹிசார் தொகுதியை பாஜக ஒதுக்கியுள்ளது.

சினிமாவில் வருமே.. ஹீரோ ஓபனிங் சீனுக்கு பூபோடற மாதிரி.. தமிழச்சிக்கு அப்படி வரவேற்பு.. மந்தைவெளியில்சினிமாவில் வருமே.. ஹீரோ ஓபனிங் சீனுக்கு பூபோடற மாதிரி.. தமிழச்சிக்கு அப்படி வரவேற்பு.. மந்தைவெளியில்

வாரிசு அரசியல்

வாரிசு அரசியல்

எனினும் ஒரே குடும்பத்தில் தனக்கும் மகனுக்கு பதவி கிடைப்பது வாரிசு அரசியலுக்கும் குடும்ப அரசியலுக்கு வழி வகுக்கும் என பிரேந்திர சிங் எண்ணினார். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ளார்.

96 ஆண்டுகளாக

96 ஆண்டுகளாக

இதுகுறித்து பிரேந்திர சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இது நான் தன்னிச்சையாக எடுத்த முடிவு. என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை. 96 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறது எங்கள் குடும்பம்.

தேர்ச்சி

தேர்ச்சி

ராஜினாமா செய்த எனது முடிவால் அடுத்தவர்கள் அரசியலுக்கு வர வழி கிடைக்கும். எனது மகனின் செயல்பாட்டை 10 ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். அவரது அரசியல் தேர்வில் தேர்ச்சியா, தோல்வியா என்பது தேர்தலில் மக்கள் முடிவு எடுப்பார்கள்.

முழுக்கு

முழுக்கு

அதற்காக நான் அரசியல் வாழ்க்கைக்கே முழுக்கு போட்டுவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. நான் சார்ந்த கட்சியை பலப்படுத்த பணியாற்றுவேம் என்று கூறியுள்ளார். தனது மகனுக்கோ மனைவிக்கோ, மகளுக்கோ சீட் கிடைக்காவிட்டால் கட்சியிலிருந்து விலகும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பிரேந்திர சிங் வித்தியாசமாக உள்ளார்.

English summary
Union Minister for Steel Chaudhary Birender Singh resigns after his son Brijendra Singh's name was announced as the BJP candidate from Hisar in Haryana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X