டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுஷ்மாவின் டிவிட்டை பார்த்துவிட்டுதான் இன்று நாடாளுமன்றமே சென்றேன்.. உடைந்து அழுத ரவிசங்கர் பிரசாத்

முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மரணத்தை அடுத்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் உடைந்து அழுத சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Sushma Swaraj - முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

    டெல்லி: முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மரணத்தை அடுத்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் உடைந்து அழுத சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Union Minister RS Prasad tears up while talking about Sushma Swaraj

    முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    அவரின் உடல் வைக்கப்பட்டு இருக்கும் எய்ம்ஸ் மருத்துவனையில் தற்போது அரசியல்வாதிகள் குவிந்து வருகிறார்கள். அவரின் உடலுக்கு முக்கியஸ்தர்கள் பலர் அங்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    என்ன ஒரு கம்பீரம்.. மறக்க முடியாத சுஷ்மா!

    அதேபோல் பிரதமர் மோடி, ஜெ பி நட்டா, அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சுஷ்மாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். தற்போது மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சுஷ்மாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவர், இன்று நான் நாடாளுமன்றம் வந்த போது கூட சுஷ்மா சுவராஜின் டிவிட்டை பார்த்துவிட்டுத்தான் வந்தேன். அவர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்து டிவிட் செய்து இருந்தார். ஆனால் இப்போது அவர் இல்லை என்கிறார்கள்.

    என்னால் இதை நம்பவே முடியவில்லை. அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை, என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார். அவர் பேசிக்கொண்டே இருக்கும் போதே செய்தியாளர் சந்திப்பில் உடைந்து அழுதார்.

    அதன்பின், சுஷ்மா நம்முடன் தற்போது இல்லை. இதை பற்றி பேச என்னிடம் வார்த்தையே இல்லை என்று ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.

    English summary
    Union Minister RS Prasad tears up while talking about Sushma Swaraj - WATCH.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X