டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்ச்சைக்குரிய உபா சட்டம் ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது.. தனிநபரை இனி தீவிரவாதியாக அறிவிக்கலாம்

Google Oneindia Tamil News

டெல்லி: சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான புதிய உபா சட்ட மசோதா வாக்கெடுப்புக்கு பின் ராஜ்யசபாவில் நிறைவேறியது.ஏற்கனவே லோக்சபாவில் சட்டம் நிறைவேறிவிட்ட நிலையில் இனி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின் அமலுக்கு பின் உடனடியாக அமலுக்கு வரும்.

மத்திய அரசு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான உபா சட்டத்தில் அண்மையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது வலிமையாக்கி உள்ளது. இதன்படி ஒருவரை தீவிரவாதி அல்லது தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உடையவர் என்று அறிவித்து இந்த சட்டம் மூலம் கைது செய்து விசாரிக்கலாம். அவர்களின் சொத்து மற்றும் நிலங்களை பறிமுதல் செய்யலாம்.இந்த வழக்குகளை இனி என்ஐஏ விசாரிக்கும். மேலும் இச்சட்ட மசோதா என்ஐஏ அமைப்பிற்கு பெரிய அளவில் அதிகாரங்களை வழங்குகிறது.

Unlawful Activities Act amendment, 2019 passed in Rajya Sabha

இந்த உபா சட்ட மசோதா ஏற்கனவே லோக்சபாவில் நிறைவேறிவிட்டது. ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதவிற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அக்கட்சியின் மூத்த தலைவர் பசிதம்பரம், தனி நபரை தீவிரவாதியாக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமித்ஷா, நாட்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது எமர்ஜென்சி அறிமுகம் செய்யப்பட்டதே அப்போது என்ன நடந்தது என்று பேசலாமா என வாதிட்டார். மேலும் பா சட்ட திருத்த மசோதாவுக்கு முழுமையான நாம் ஆதரவு தெரிவித்தால் நமது விசாரணை அமைப்புகள் சர்வதேச அளவில் அதிக அதிகாரங்களுடன் செயல்பட வாய்ப்பு ஏற்படும் என்றார்.

இதையடுத்து ராஜ்யசாவில் உபா சட்ட திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது 147 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் உபா சட்டம் நிறைவேறியது. எதிர்த்து 47 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர்.

English summary
Rajya Sabha passed Unlawful Activities (Prevention) Act(UAPA) amendments, 2019
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X