டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமலுக்கு வரும் "அன்லாக் 1.0".. எங்கெல்லாம் தளர்வுகள்.. எப்போது நடைமுறைக்கு வரும்.. முழு விபரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுக்க 5.0 ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு அன்லாக் 1.0 என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது . இதன் மூலம் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் மூன்று கட்டங்களாக தளர்வுகள் கொண்டு வரப்பட உள்ளது.

Recommended Video

    Unlock 1.0: எப்போது நடைமுறைக்கு வரும்.. முழு விபரம்!

    கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் தளர்வுகள் கொண்டாட வரப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளதது.

    கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே இருக்கும் இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக தளர்வுகள் கொண்டு வரப்பப்டும். அதன்படி மூன்று கட்டங்களாக கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    லாக்டவுன் 5.0.. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜுன் 30 வரை ஊரடங்கு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு! லாக்டவுன் 5.0.. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜுன் 30 வரை ஊரடங்கு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

    முதல் கட்ட தளர்வு என்ன

    முதல் கட்ட தளர்வு என்ன

    கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே ஜூலை 8ம் தேதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அதிகரிக்கப்படும். ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர்கள் விரும்பினால் இதில் கூடுதல் தளர்வுகளை கொண்டு வரலாம். சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணிகளை தொடங்கலாம்.

    இரண்டாம் கட்ட தளர்வு

    இரண்டாம் கட்ட தளர்வு

    இரண்டாம் கட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் திறக்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே மட்டும் இந்த தளர்வு கொண்டு வரப்படும். மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு இந்த முடிவை எடுக்கலாம். ஜூலை மாதத்தில் இப்படி கல்வி நிறுவனங்களை இயக்க தொடங்கலாம்.

    மூன்றாவது கட்டம்

    மூன்றாவது கட்டம்

    இதில் மூன்றாவது கட்டத்தில் சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படும். சர்வதேச விமான பயணம் குறித்து இதில் அறிவிப்பு வெளியாகும். மெட்ரோ ரயில் இயக்கம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும். சினிமா தியேட்டர்கள், மால்கள், ஜிம்கள், கூட்டங்கள் நடக்கும் இடங்கள், பார்கள், ஆடிடோரியங்கள், விளையாட்டு போட்டிகள் இதில் இயக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு ஜூலையில் வெளியாகும். தேதிகள் அப்போது அறிவிக்கப்படும்.

    நேரம் நீட்டிப்பு

    நேரம் நீட்டிப்பு

    இது போக மக்கள் வெளியே செல்வதற்கான நேரத்தில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் இனி வரும் நாட்களில் காலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வெளியே செல்ல முடியும். இதற்கு முன் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை என்று கட்டுப்பாடு இருந்தது. அதில் தற்போது தளர்வுகளை கொண்டு வரப்பட்டுள்ளது.

    English summary
    Unlock 1.0 will be implemented in three ways in non containment zones says MHA today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X