டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்வதேச விமான சேவை.. விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும்.. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச விமான சேவை தொடங்கி விளையாட்டு போட்டிகள் வரை பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு எப்போது அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுக்க லாக்டவுன் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தப்பட உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் மட்டும் தளர்வுகள் கொண்டு வரப்பட உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Unlock 1: In phase 3, International air travel and sports activity will be allowed says MHA

கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் தளர்வுகள் வரும் ஜூன் 8ம் தேதியில் இருந்து மூன்று கட்டமாக கொண்டு வரப்படும்.

இதில் மூன்றாவது கட்டத்தில் சூழ்நிலையை பொறுத்து முக்கிய தளர்வுகள் கொண்டு வரப்படும். சர்வதேச விமான பயணம் குறித்து இதில் அறிவிப்பு வெளியாகும். மெட்ரோ ரயில் இயக்கம் தொடர்பாக இந்த மூன்றாவது கட்ட தளர்வில் அறிவிப்பு வெளியாகும்.

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து.. இ-பாஸ் தேவையில்லை.. ஆனால்.. மத்திய அரசு சொல்வது என்ன?மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து.. இ-பாஸ் தேவையில்லை.. ஆனால்.. மத்திய அரசு சொல்வது என்ன?

சினிமா தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பார்க்குகள் கூட்டங்கள் நடக்கும் இடங்கள், பார்கள், ஆடிடோரியங்கள், ஆகியவற்றுக்கு இதில் அனுமதி அளிக்கப்படும் . அதேபோல் மத கூட்டங்கள், சமுதாய விழாக்கள், சமுதாய கூட்டங்கள் விளையாட்டு போட்டிகள் செயல்பட இதில் அனுமதிக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு ஜூலையில் வெளியாகும். தேதிகள் அப்போது அறிவிக்கப்படும்.

English summary
Unlock 1: In phase 3, International air travel and sports activity will be allowed says MHA today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X