டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்லாக் 3.0.. பள்ளிகள், தியேட்டர்கள் இயங்காது.. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அன்லாக் 3.0 விதிமுறைகள் அமலுக்கு வரும். இதில் பல முக்கிய தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாடு முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 5 முறை லாக்டவுன் போடப்பட்ட பின்பும் கூட கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த முறை லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது, அன்லாக் செயல்பாடுகள் மூன்று கட்டமாக அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்தது.

அதாவது அன்லாக் 1, 2, மற்றும் 3 என்று மூன்று கட்டமாக அன்லாக் செயல்பாடுகள் அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்தது. இரண்டாம் கட்ட அன்லாக் செயல்பாடுகள் தற்போது அமலில் உள்ளது. இந்த அன்லாக் 3.0 வரும் ஆகஸ்ட் 1ம் தேதியோடு முடிவிற்கு வருகிறது

அதிர்ச்சியில் மக்கள்.. ஆந்திராவை உலுக்கிய கொரோனா.. ஒரே நாளில் 10,000+ கேஸ்கள்.. என்ன நடந்தது? அதிர்ச்சியில் மக்கள்.. ஆந்திராவை உலுக்கிய கொரோனா.. ஒரே நாளில் 10,000+ கேஸ்கள்.. என்ன நடந்தது?

என்ன அறிவிப்பு

என்ன அறிவிப்பு

இந்த நிலையில் கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அன்லாக் 3.0 விதிமுறைகள் அமலுக்கு வரும். இந்த அன்லாக் செயல்முறையில், தீவிர லாக்டவுன் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் தொடரும். கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் கிடையாது. மற்ற இடங்களில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

என்ன தளர்வுகள்

என்ன தளர்வுகள்

  • இந்த அன்லாக் 3.0 மூலம் பின்வரும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகிறது.
  • இரவு நேர லாக்டவுன் மொத்தமாக நீக்கப்படுகிறது.
  • யோகா மற்றும் ஜிம்கள் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் செயல்படலாம்.
  • பள்ளிகளை திறக்க ஆகஸ்ட் 31 வரை அனுமதி கிடையாது.
  • மாநில அரசுகள் உடன் தீவிரமாக ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.
தியேட்டர் எப்படி

தியேட்டர் எப்படி

  • திரையரங்குகள் எப்போதும் போல இயங்காது. தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கருதப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
  • மெட்ரோ ரயில்கள் எப்போதும் போல இயங்காது:அனுமதி அளிக்கப்படவில்லை
  • விளையாட்டு போட்டிகள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை
  • பெரிய கூட்டங்கள் நடத்த தடை தொடரும்
சுதந்திர தினம் எப்படி

சுதந்திர தினம் எப்படி

  • விமான சேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கப்படும்.
  • வந்தே பாரத் விமான சேவை எப்போதும் போல செயல்படும்.
  • முழு விமான சேவை, ரயில் சேவை தொடங்கப்படாது.
  • மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மாநில அரசுக்களே முடிவு செய்யலாம்.
  • சுதந்திர தின கொண்டாட்டம் சமூக இடைவெளியோடு நடக்க அனுமதி அளிக்கப்படும்.

English summary
Unlock 3.0 announced: Schools and colleges won't be opened in this phase
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X