டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் அன்லாக் 3.0ல் தியேட்டர்கள் மற்றும் மால்களை திறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது.

Recommended Video

    Unlock 3.0: விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்

    நாடு முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 5 முறை லாக்டவுன் போடப்பட்ட பின்பும் கூட கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த முறை லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது, அன்லாக் செயல்பாடுகள் மூன்று கட்டமாக அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்தது. அதாவது அன்லாக் 1, 2, மற்றும் 3 என்று மூன்று கட்டமாக அன்லாக் செயல்பாடுகள் அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்தது.

    சுதந்திரத் திருநாளில் கொரோனாவில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற உறுதியை மேற்கொள்வோம்: மோடிசுதந்திரத் திருநாளில் கொரோனாவில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற உறுதியை மேற்கொள்வோம்: மோடி

    தியேட்டர் திறப்பு

    தியேட்டர் திறப்பு

    தற்போது இவரை இரண்டு கட்டமாக அன்லாக் செயல்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அன்லாக் செயல்பாடுகள் தற்போது அமலில் உள்ளது. இந்த அன்லாக் 2.0 வரும் ஜூலை 31ம் தேதியோடு முடிவிற்கு வருகிறது. இந்தியாவில் அன்லாக் 3.0ல் தியேட்டர்கள், ஜிம்கள் மற்றும் மால்களை திறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. 50% மக்களுடன் தியேட்டர்கள் செயல்படும் என்கிறார்கள்.

    பள்ளிகள்

    பள்ளிகள்

    அன்லாக் 2.0ல் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே மட்டும் இந்த தளர்வு கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா கேஸ்கள் அதிகரித்த காரணத்தால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் அன்லாக் 3.0ல் பள்ளிகள் திறக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

    கல்லூரிகள் திறப்பு

    கல்லூரிகள் திறப்பு

    இந்த நிலையில் அன்லாக் 3.0ல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆம் இப்போது பள்ளிகள், கல்லூரிகளை திறந்தால் அது ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல் பெற்றோர் அமைப்புகள் உடனும் இது தொடர்பாக ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    தமிழகம் எப்படி

    தமிழகம் எப்படி

    முன்னதாக தமிழகத்தில் இப்போது பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளிகளை திறக்கும் திட்டம் எதுவும் இல்லை. மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை பொறுத்தே முடிவு எடுக்கப்படும். கொரோனா பாதிப்பு இருக்கும் வரை பள்ளிகளை திறக்க முடியாது. கொரோனா சரியான பின்புதான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். சரியான நேரத்தில் முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும், என்று கூறியுள்ளார்.

    English summary
    Unlock 3.0: Cinemas, gyms likely to open but Schools to remain shut.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X