டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆகஸ்ட் 31 வரை சர்வதேச விமான சேவை ரத்து.. விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சிறப்பு விமானங்கள் தவிர மற்ற அனைத்து சர்வதேச விமானச் சேவைகளும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க லாக்டவுன் அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூட அன்லாக் 2.0 செயல்பாடுகள் அமலில் உள்ளது. இந்த இரண்டாம் கட்ட அன்லாக் செயல்பாடுகள் ஜூலை 31ம் தேதியோடு முடிவிற்கு வருகிறது.

Unlock 3.0: International flight service halted till August 31st

இன்று, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அன்லாக் 3.0 விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. பல முக்கிய தளர்வுகளுடன் கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அன்லாக் 3.0 செயல்முறையில் முழு விமான சேவை, ரயில் சேவை தொடங்கப்படாது. வரும் நாட்களில் விமான சேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதிகரிக்கும் கொரோனா.. என்ன செய்வதென புரியாமல் கைவிட்ட பெங்களூர் மாநகராட்சி.. சென்னை எவ்வளவோ பெட்டர்அதிகரிக்கும் கொரோனா.. என்ன செய்வதென புரியாமல் கைவிட்ட பெங்களூர் மாநகராட்சி.. சென்னை எவ்வளவோ பெட்டர்

Recommended Video

    Unlock 3.0: விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்

    இந்த நிலையில் இந்தியாவில் சிறப்பு விமானங்கள் தவிர மற்ற அனைத்து சர்வதேச விமானச் சேவைகளும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வந்தே பாரத் விமான சேவை எப்போதும் போல செயல்படும்.

    இதன் மூலம் வெளிநாட்டில் சிக்கி இருக்கும் இந்தியர்கள் மீட்கப்படுவார்கள். அதேபோல் இன்னொரு பக்கம் சரக்கு விமானங்கள் எப்போதும் போல செயல்படும்.

    English summary
    Unlock 3.0: International flight service halted till August 31st says Central Government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X