டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செப்.21 முதல்.. 9-12ம் வகுப்பு மாணவர்கள்.. விருப்பம் இருந்தால் பள்ளிகளுக்கு செல்லலாம்.. மத்திய அரசு!

Google Oneindia Tamil News

டெல்லி: செப்டம்பர் 21ம் தேதி முதல் 9-12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பெயரில் பள்ளிக்கூடம் செல்ல விரும்பினால் செல்லலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே இருக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.

அன்லாக் 4.0 செயல்முறையில் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Unlock 4.0: 9-12 std students can go to school on their own wish says MHA

பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு இப்படி தடைகள் விதிக்கப்பட்டாலும் கூட, சில முக்கியமான தளர்வுகள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறையில் மட்டுமே மாணவர்கள் கல்வி பயிலலாம். கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் செப்டம்பர் 21ம் தேதி முதல் செல்லலாம். ஆன்லைன் வகுப்புகளை நடத்த வசதியாக ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லலாம்.

9-12ம் வகுப்பு மாணவர்கள் செப்டம்பர் 21ம் தேதி முதல் தங்கள் சொந்த விருப்பத்தின் பெயரின் பள்ளிகளுக்கு செல்லலாம். கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியில் மட்டுமே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் பெற்றோர்களின் அனுமதி கடித்ததோடு மட்டுமே இவர்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அன்லாக் 4.0.. சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடரும்.. சிறப்பு விமானங்களுக்கு அனுமதி!அன்லாக் 4.0.. சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடரும்.. சிறப்பு விமானங்களுக்கு அனுமதி!

செப்டம்பர் 21ம் தேதி முதல் தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் பயிற்சி வகுப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முறையான ஆய்வுகள், மத்திய அரசுடனான ஆலோசனைக்கு பிறகு பிஜி மேற்படிப்புகள் மற்றும் பிஎச்டி படிப்புகளுக்கான வகுப்புகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Unlock 4.0: 9-12 std students can go to school on their own wish says MHA in their announcement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X