டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே லாக்டவுன் போட கூடாது.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுக்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே முழு லாக்டவுனை மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுக்க கொரோனவை கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமலில் உள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் லாக்டவுன் அமலில் உள்ளது.

Unlock 4.0; Lockdown shouldnt be implemented outside containment zone says MHC

லாக்டவுன் தளர்வுகள் மொத்தம் மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டு வந்தது. அன்லாக் 1.0, 2.0, 3.0 என்று மூன்று கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக அன்லாக் 4.0 அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்லாக் 4.0 செயல்முறை செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும். இதன் மூலம் கட்டுப்பாட்டு பகுதிகளில் செப்டம்பர் 30 வரை முழு லாக்டவுன் அமலில் இருக்கும்.

இந்த நிலையில் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே முழு லாக்டவுனை மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் அனுமதி இன்றி செப்டம்பர் 1ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே முழு லாக்டவுனை அமல்படுத்த கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அன்லாக் 4.0.. சினிமா தியேட்டர்களுக்கு இந்த முறையும் அனுமதி கிடையாது.. செப். 30 வரை தடை நீட்டிப்பு!அன்லாக் 4.0.. சினிமா தியேட்டர்களுக்கு இந்த முறையும் அனுமதி கிடையாது.. செப். 30 வரை தடை நீட்டிப்பு!

இதனால், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுக்க அறிவிக்கப்படும் லாக்டவுன் தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்படும் முழு லாக்டவுன் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியிலும் அமலில் இருந்தது. ஆனால் இனி கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே லாக்டவுன் போட கூடாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில், இனி ஞாயிற்றுக்கிழமைகளில் லாக்டவுன் நீடிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Unlock 4.0; Lockdown shouldnt be implemented outside containment zone says MHC
English summary
Unlock 4.0; Lockdown shouldn't be implemented outside containment zone says MHC to state governments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X