டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மால்கள், ஹோட்டல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன.. மத்திய அரசு வெளியீடு

Google Oneindia Tamil News

டெல்லி: வரும் 8ஆம் தேதி முதல் மால்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மால்களில் உள்ள உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஹோட்டல்களும் ரெஸ்டாரெண்டுகளும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

Recommended Video

    குழந்தை-யானை நட்பு..வைரலாகும் டிக்டாக் வீடியோ

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கை பிறப்பித்த மத்திய அரசு ஐந்து கட்டங்களாக ஊரடங்கை நீட்டித்துள்ளது. எனினும் அன்லாக் 1 என்றபெயரில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அந்த வகையில் வரும் 8ம் தேதி முதல் ஷாப்பிங் மால்களில் உள்ள உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரெண்டுகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க என்னென்ன நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

    வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.. முழு விவரம்வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.. முழு விவரம்

     வெப்பநிலை பரிசோதனை

    வெப்பநிலை பரிசோதனை

    • ஷாப்பிங் மால்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாராத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி;
    • மால்களில் நுழைவு வாயில்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். சானிடைசர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    • முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
    • ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
    தியேட்டருக்கு அனுமதி இல்லை

    தியேட்டருக்கு அனுமதி இல்லை

    • கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
    • சமூக தொலைதூர விதிமுறைகளை உறுதிப்படுத்த ஹோட்டல் நிர்வாகம் போதுமான ஆட்களை நியமிக்க வேண்டும்.
    • ஷாப்பிங் மால்களில் தியேட்டர்களை திறக்க அனுமதி இல்லை
    சமூக இடைவெளி

    சமூக இடைவெளி

    • உணவகத்தில் இருக்கைகளுக்கு இடையே போதுமான சமூக இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும்.
    • ஒவ்வொருமுறையும் மாற்றம் செய்யப்படக் கூடிய மெனு கார்டுகளை பயன்படுத்த வேண்டும்.
    • துணி நாப்கின்களுக்கு பதிலாக, நல்ல தரமான ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத் தக்க காகித நாப்கின்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும்.
     உணவு விநியோகம்

    உணவு விநியோகம்

    • டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறைகளுக்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.
    • சமூக தொலைதூர விதிமுறைகளை பின்பற்றும் வகையில்தான் பஃபே சேவை இருக்க வேண்டும்.
    • உணவு விநியோக ஊழியர்கள் உணவு பொட்டலத்தை, விருந்தினர் அல்லது வாடிக்கையாளரின் அறை வாசலில் விட்டுவிட்டு வர வேண்டும். நேரடியாக பெறுநரிடம் ஒப்படைக்கக்கூடாது.

    English summary
    Unlockdown SOPs: health ministry sop on preventive measures in malls and hotels
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X