டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே!

இந்தியாவின் சிறந்த முதல்வராக மூன்றாவது முறையாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூட் ஆப் நேஷன் சர்வேயில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் சிறந்த முதல்வராக மூன்றாவது முறையாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூட் ஆப் நேஷன் சர்வேயில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    Mood of the Nation Survey | மோடி தான் சிறந்த பிரதமர்

    இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தேர்வு செய்துள்ளனர்.இரண்டாவது முறையாக அரியணை ஏறி இருக்கும் மத்திய பாஜக அரசின் ஆட்சி குறித்தும், பிரதமர் மோடியின் செல்வாக்கு குறித்தும், இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைடஸ் நிறுவனம் இணைந்து சர்வே நடத்தி இருக்கிறது.

    இதில் இந்தியாவின் அரசியல் நிலவரங்கள் குறித்தும், இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என்றும் மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    வேலை இல்லை.. திருமணம்.. எமர்ஜென்சி.. கனவுகளுடன் கோழிக்கோடு திரும்பியவர்கள்.. பலியானவர்களின் பின்னணி!வேலை இல்லை.. திருமணம்.. எமர்ஜென்சி.. கனவுகளுடன் கோழிக்கோடு திரும்பியவர்கள்.. பலியானவர்களின் பின்னணி!

    முதலிடம் பிடித்தார்

    முதலிடம் பிடித்தார்

    இதில் இந்தியாவின் சிறந்த முதல்வராக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூட் ஆப் நேஷன் சர்வேயில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது முறையாக இவர் இப்படி இந்த இடத்தை அடைந்துள்ளனர். இவர் 24% வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கடந்த முறையை விட 6 % அதிகம் ஆகும் இது.

    சரிந்தார்

    சரிந்தார்

    முன்பு ஆதித்யநாத்திற்கு அடுத்த இரண்டாம் இடத்தை அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பகிர்ந்து கொண்ட மேற்கு வாங்க முதல்வர் மமதா பானர்ஜி தற்போது நான்காம் இடத்திற்கு பின் தங்கி உள்ளார். இவருக்கு 9% மக்கள் ஆதரவு உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 15% வாக்குகள் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    என்ன இடம்

    என்ன இடம்

    ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 11 சதவிகிதம் வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். 7% ஆதரவுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே 5 மற்றும் 6ம் இடத்தில் இருக்கிறார்கள். தமிழக முதல்வர் பழனிசாமி இதில் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.

    எப்படி

    எப்படி

    கேரளா முதல்வர் பினராயி விஜயனும் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை. ஜூலை 15 முதல் ஜூலை 27 வரை இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 12021 பேரிடம் இந்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.67% கிராமத்திலும், 33% நகரத்திலும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட பெரிய மாநிலங்களில் இருக்கும் 97 எம்பி தொகுதிகளில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

    English summary
    UP CM Adityanath elected as the best CM for third time in Mood of Nations survey by India Today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X