டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி. தேர்தலில் காங். தனித்து நின்றால்... பாஜகவுக்கு 14 சீட்டு லாபம்... பிரணாய் ராய் கணிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து நின்றால் பாஜகவுக்கு தான் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று என்டிடிவியின் பிரணாய் ராய் அலசி ஆராய்ந்து கூறியுள்ளார்.

டெல்லிக்கு ராஜாவாக ஆசைப்படும் கட்சிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போவது உத்தரப்பிரதேச மாநிலம் தான். இங்கு உள்ள 80 தொகுதிகளில் யார் அதிக இடங்களை வெல்கிறார்களோ அவர்களே ஆட்சியமைக்க முடியும்.

உதாரணமாக கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உபியில் பாஜக 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 73 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி, காங்கிரஸ் படுதோல்வி அடைந்தன.

அவுங்களே அனுப்புவாங்களாம்.. அவுங்களே கூட்டி வருவாங்களாம்.. நீரவ் மோடி கைது பற்றி காங்கிரஸ் கிண்டல் அவுங்களே அனுப்புவாங்களாம்.. அவுங்களே கூட்டி வருவாங்களாம்.. நீரவ் மோடி கைது பற்றி காங்கிரஸ் கிண்டல்

ராஜதந்திரம்

ராஜதந்திரம்

இதனால் அதிர்ச்சி அடைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயவாதி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து இந்த முறை தேர்தலை சந்திக்க உள்ளார். பாஜகவை வீழ்த்தும் இந்த ராஜதந்திர கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை. அதேநேரம் சோனியா மற்றும் ராகுல் போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என அந்த கட்சிகள் அறிவித்தன.

காங்கிரஸின் பரிதாபம்

காங்கிரஸின் பரிதாபம்

கூட்டணியில் சேர்ந்துக்கொள்ள பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் மறுத்ததால் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்தது. அதேநேரம் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் முக்கிய தலைகள் 7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இதனால் கடுப்பான மாயாவதி காங்கிரஸின் இந்த செயலை கண்டித்துள்ளார்.

பாஜகவுக்கு லாபம்

பாஜகவுக்கு லாபம்

காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான ஓட்டுக்கள் பிரியும் என்றும் இது பாஜகவுக்குத்தான் லாபம் என்றும் என்டிடிவியின் பிரணாய் ராய் தெரித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் பாஜகவுக்கு 14 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு இழப்பு

பாஜகவுக்கு இழப்பு

கடந்த முறை 73 தொகுதிகள் பெற்ற பாஜக கூட்டணி, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், 2014ம் ஆண்டு இருந்த அதே மோடி அலை இப்போது இருந்தாலும் பாஜக கூட்டடணி 37 இடங்கள் வரை தான் பெறும் என்று பிரணாய் ராய் கூறியுள்ளார்.

கூடுதல் இடங்கள்

கூடுதல் இடங்கள்

காங்கிரஸ் கட்சி ஒருவேளை தனித்து போட்டியிடாவிட்டால் இன்னும் 14 இடங்களை பாஜக கூட்டணி இழக்க வேண்டி இருக்கும். இதனால் 23 இடங்களை தான் பாஜக பெரும் நிலை வரலாம். ஆனால் காங்கிரஸின் தனித்து போட்டியிடும் முடிவால் 14 சீட்டுகள் பாஜகவுக்கு கூடுதலாக கிடைக்கும்.

English summary
If Congress fighting separately gives BJP an extra 14 seats in UP lok shaba election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X