• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

லோக்சபா தேர்தல்: காங். கூட்டணிக்கு 272 இடம் கிடைக்கும்.. பாஜக தோற்கும்.. மூட் ஆப் தி நேஷன் சர்வே

|

டெல்லி: லோக்சபாவுக்கு நாளை தேர்தல் நடப்பதாக இருந்தால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 272 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 2வது இடமே கிடைக்கும் என்று இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்று சில முடிவுளை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

UPA will get 272 seats if polls held tomorrow, says MOTN
  • அதிமுக, ஒய்எஸ்ஆர் காங். வந்தாலும் பாஜகவுக்கு லாபம் கிடைக்காது
  • நாடாளுமன்றத்துக்கு நாளை தேர்தல் நடந்தால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு 272 இடங்கள் கிடைக்கும்
  • 44 சதவீத வாக்குகளை எதிர்க்கட்சி கூட்டணி பெறும் - மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பு
  • பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 40 சதவீத வாக்குகள் கிடைக்கும்

வரும் தேர்தலில் மமதா பானர்ஜி, மாயாவதி, மெகபூபா முக்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் இணைந்து வந்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வரும் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைக்கும்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவும், ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டியும் பாஜகவுக்கு ஆதரவு அளித்தாலும் கூட தேசிய முற்போக்குக் கூட்டணியின் சரிவைத் தவிர்க்க முடியாது. இவர்கள் இணைந்தாலும் கூட தேசிய ஜனநாயகக் கூட்ணிக்கு 234 இடங்களே கிடைக்கும்.

கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 336 இடங்கள் கிடைத்தன. ஆனால் இந்த முறை படு வீழ்ச்சியை கூட்டணி சந்திக்கவுள்ளது. கடந்த தேர்தலுக்குப் பிறகு தெலுங்கு தேசம், உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்எல்எஸ்பி போன்ற முக்கிய கூட்டாளிகளை பாஜக இழந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.

இந்தஇருவரைத் தவிர மற்றவர்கள் மற்றும் பிற கட்சிகளுக்கு மொத்தமாக 37 இடங்கள் கிடைக்கும். இவர்களை பாஜக கவர்ந்திழுத்தால் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கை கூடி வரும். எனவே 3வது இடத்தைப் பிடிப்பவர்களுக்கு முக்கியத்துவம் பிரகாசமாக உள்ளது.

லோக்சபாவில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 272 ஆகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
UPA will get 272 seats if polls held tomorrow, says MOTN
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more