டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Upsc civil services result 2020: மொத்தம் 761 பேர் தேர்ச்சி.. சுபம் குமார் முதலிடம் , முழு விவரம்

Google Oneindia Tamil News

டெல்லி : 2020ம் ஆண்டு யூபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் (ஐஏஎஸ், ஐபிஎஸ்,ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ்) தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. 761 பேர் தேர்வு பெற்றுள்ளனர். பீகாரைச் சேர்ந்த சுபம் குமார் என்பவர் ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜக்ராதி அவஸ்தி என்ற மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆண்டு தோறும் மத்திய அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்ப சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தும். இந்த தேர்வின் மூலமாக மட்டுமே இந்திய ஆட்சி பணியின் உயர் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள்

பள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி... ஈஸ்வரன் கூறும் 8 யோசனைகள்..! பள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி... ஈஸ்வரன் கூறும் 8 யோசனைகள்..!

அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சுபம் குமார் என்ற மாணவர் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தேர்வுமுடிவுகள்

தேர்வுமுடிவுகள்

தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in இணையதளத்தில் பார்க்கலாம்.வெற்றி பெற்றவர்களின் விரிவான மதிப்பெண்கள் இன்னும் வெளியாகவில்லை. தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் இணையதளத்தில் கிடைக்கும்.

எந்த பிரிவினர் எவ்வளவு

எந்த பிரிவினர் எவ்வளவு

வெற்றி பெற்ற 761 பேரில் 263 பொது அல்லது ஓபன் கோட்டாவில் வென்றவர்கள் ஆவர். பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினர் ( EWS) 86 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (obc) 229 பேர் தேர்வாகி உள்ளனர். எஸ்சி பிரிவில் இருந்து 122 பேர், எஸ்டி பிரிவில் இருந்து 61 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 150 வேட்பாளர்கள் ரிசர்வ் பட்டியலில் உள்ளனர். இந்த 75 மாணவர்களில் பொதுபிரிவினர் ஆவர். 15 பேர் EWS, 55 OBC, ஐந்து SC மற்றும் ஒருவர் எஸ்டி பிரிவு ஆவர்.

தரவரிசை 10

தரவரிசை 10

தேர்வில் வென்ற டாப் 10 நபர்கள்

ரேங்க் 1: சுபம் குமார்

ரேங்க் 2: ஜாக்ரதி அவஸ்தி

ரேங்க் 3: அங்கிதா ஜெயின்

ரேங்க் 4: யாஷ் ஜாலுகா

ரேங்க் 5: மமிதா யாதவ்

ரேங்க் 6: மீரா கே

ரேங்க் 7: பிரவீன் குமார்

ரேங்க் 8: ஜீவானி கார்த்திக் நக்ஜிபாய்

ரேங்க் 9: அபலா மிஸ்ரா

ரேங்க் 10: சத்யம் காந்தி

200 பேர் ஐபிஎஸ்

200 பேர் ஐபிஎஸ்

ஐஏஎஸ் பதவிக்கு 180 பேர் தேர்வாகி உள்ளனர். அடுத்தபடியாக ஐஎஃப்எஸ் -க்கு 36 பேர் தேர்வாகி உள்ளனர். அதற்குஅடுத்த படியாக ஐபிஎஸ் அதிகாரி பதவிக்கு 200 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். 302 பேர் மத்திய அரசின் சேவைகள் குழு A பிரிவு அதிகாரிகளாகவும் , 118 பேர் மத்திய அரசு சேவைகள் b பிரிவு அதிகாரிகளாகவும் நியமிக்கப்படுவர்ர்கள் என்று யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியுள்ளது. "பல்வேறு சேவைகளுக்கான நியமனம் தேர்வுக்கான விதிகளில் உள்ள விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு கிடைக்கக்கூடிய காலியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரப்பப்படும்" என்று கூறியுள்ளது.

UPSC அறிவிப்பு

UPSC அறிவிப்பு

தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் அதன் முடிவில் ஏதேனும் பிழையைக் கண்டால் அல்லது ஏதாவது தெளிவு பெற வேண்டும் என்றால், அவர்கள் UPSC ஐ அணுகலாம். யுபிஎஸ்சி வளாகத்தில் உள்ள தேர்வு மண்டபத்திற்கு அருகில் பிரத்யேமாக ஒரு கவுண்டரை யுபிஎஸ்சி அமைத்துள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நாட்களில் தங்கள் தேர்வு அல்லது முடிவுகள் குறித்து ஏதேனும் தகவல் அல்லது தெளிவு பெறலாம். விண்ணப்பதாரர்கள் டெல்லி பின்கோடுடன் 23385271, 23381125 மற்றும் 23098543 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

English summary
UPSC Civil Services Exam 2020 result declared. A total of 761 candidates have been recommended for appointment. The top rank has been obtained by Shubham Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X