டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்க சொல்றதை கேளுங்க.. இல்லைனா ரிசைன் பண்ணிடுங்க.. ஆர்பிஐ கவர்னருக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை!

மத்திய அரசு சொல்வதை கேட்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியைவிட்டு விலகிவிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு சொல்வதை கேட்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியைவிட்டு விலகிவிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே செல்கிறது.

இருவருக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. தொடர்ந்து பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் மிகப்பெரிய பிரச்சனைகள் உருவெடுக்க தொடங்கி இருக்கிறது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை நவ. 26 வரை கைது செய்ய தடை நீடிப்பு ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை நவ. 26 வரை கைது செய்ய தடை நீடிப்பு

யார் இவர்

யார் இவர்

இந்த நிலையில் ஆர்பிஐ மீது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அஸ்வினி மகாஜன் புகார் வைத்துள்ளார். அஸ்வினி மகாஜன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய தலைவர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிதித்துறை அணியின் தலைவர் இவர்தான். இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். அதேபோல் நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லிக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.

உரிமை உள்ளது

உரிமை உள்ளது

இந்த நிலையில் இவர்தான் ஆர்பிஐ அமைப்பிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். ஆர்பிஐ அமைப்பை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆர்பிஐயை கட்டுப்படுத்தும் சட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து உபயோகிக்கும். ஆர்பிஐ மிக அதிகாரத்துடன் செயல்பட முடிவு செய்துள்ளது. அது இந்தியாவிற்கு நல்லதல்ல.

கட்டுப்படுத்துங்கள்

கட்டுப்படுத்துங்கள்

ஆர்பிஐ சுதந்திரமாக செயல்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆர்பிஐ அமைப்பில் இருக்கும் நபர்கள் பொதுவில் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் செய்தியாளர்களிடம் பேசாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் பட்டேலில் கடமை. அவர் தனது சக பணியாளர்களை கட்டுபடுத்த வேண்டும்.

வேலையைவிட்டு போங்க

வேலையைவிட்டு போங்க

ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் பட்டேல் மத்திய அரசு சொல்வதைதான் கேட்க வேண்டும். அப்படி கேட்க விருப்பம் இல்லையென்றால் அவர் வேலையைவிட்டு தாராளமாக செல்லலாம். அவர் செல்வதால் அரசுக்கு எந்த இழப்பும் கிடையாது என்று மகாஜன் கூறியுள்ளார்.

English summary
Urjit Patel should follow our order or quit from RBI governor post says RSS .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X