டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா வருகிறார் அமெரிக்க துணை வெளியுறவுத்துறை அமைச்சர் பீகன்

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஈ பீகன் இந்தியா வரவுள்ளார். தனது இந்திய பயணத்தின்போது அவர் பங்களாதேஷுக்கும் செல்கிறார்.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

அமெரிக்க துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஈ. பீகன் இந்தியாவிற்கும், பங்களாதேஷிற்கும் அக்டோபர் 12 முதல் 16 வரை பயணம் மேற்கொள்கிறார் .அக்டோபர் 12 முதல் 14 வரை அவர் டெல்லியில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளை சந்திக்கிறார். இந்தியா அமெரிக்கா பொதுச்சபையில் முக்கிய உரை ஆற்றுகிறார்.

US Deputy secretary of State to visit India

அக்டோபர் ஆறாம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இடையே நடந்த சந்திப்பின் அடிப்படையிலும், இந்த வருடம் நடக்கவிருக்கும் இந்தியா மற்றும் அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கான முன்னேற்பாடாக அமைகிறது பீகனின் இந்த பயணம்.

அமெரிக்கா இந்திய உலகளாவிய நட்பை மேலும் வலுப்படுத்துவதுடன், இந்திய பஸிபிக் பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சி, மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் இருநாடுகளும் எவ்வாறு செயல்படலாம் என்ற விவரங்களில் பீகன் அதிக கவனம் செலுத்துவார்.

அக்டோபர் 14 முதல் 16 வரை பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மூத்த அதிகாரிகளை சந்தித்து அமெரிக்கா-பங்களாதேஷ் நட்பை உறுதிப்படுத்துகிறார்.

அவருடைய பங்களாதேஷ் பயணம் இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அனைவருடைய பொதுநோக்கமான அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி, சுதந்திரமான வெளிப்படைத்தன்மை பற்றியதாக இருக்கும். அமெரிக்க-பங்களாதேஷ் கோவிட்-19 எதிர்ச்செயல் மற்றும் மீட்பு பணி ஒத்துழைப்பு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி பற்றியும் அவர் கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
US Deputy secretary of State Stephen Biegun is all set to visit India and Bangladesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X