டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரமிப்பை தூண்டுகிறது தாஜ்மஹால்.. இந்திய கலாச்சாரத்தின் அழகு.. விசிட்டர் புத்தகத்தில் டிரம்ப்

Google Oneindia Tamil News

டெல்லி: தாஜ்மஹால் பிரமிப்பைத் தூண்டுகிறது என அங்கிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் டொனால்ட் டிரம்ப். உடன் அவரது மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜெரேட் குஷ்னேர் ஆகியோரும் இன்று காலை வருகை தந்தனர்.

சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற அவர்கள் அங்கு காந்திஜியின் ராட்டையை சுழற்றி பார்த்து வியந்தனர். அவர்களுக்கு காந்தியின் தீயதை பேசாதே, கேட்காதே, பார்க்காதே என்பதை விளக்கும் 3 குரங்கு பொம்மைகள் குறித்து விளக்கப்பட்டது.

ஜார்

ஜார்

இதைத் தொடர்ந்து அவர்கள் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திற்கு சென்றனர். அங்கிருந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு சென்றனர். அங்கு டிரம்ப்பும், மெலானியாவும் பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறுகையில் தாஜ்மஹால் பிரமிப்பைத் தூண்டுகிறது.

எழில் கொஞ்சும்

எழில் கொஞ்சும்

இந்திய கலாச்சாரத்தின் அழகான வளம் மற்றும் பன்முகத்தன்மைக்கு காலமற்ற சான்று. நன்றி இந்தியா என தெரிவித்துள்ளார். அதில் டிரம்பும், மெலானியாவும் கையெழுத்திட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் யமுனை நதிக்கரையில் இருந்தபடி இயற்கை எழில் கொஞ்சும் தாஜ்மஹாலின் அழகை ரசித்தனர்.

தாஜ்மஹால்

தாஜ்மஹால்

பின்னர் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அங்கிருந்த காரிடாரில் கைகோர்த்தப்படி நடந்து சென்றனர். பின்னர் வெட்கப்புன்னகையுடன் அங்கும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இருவரும் காதல் ரசம் சொட்ட சொட்ட கைபிடித்தபடி நடந்து சென்று தாஜ்மஹாலை சுற்றி பார்த்தனர்.

புகைப்படம்

புகைப்படம்

அது போல் அவர்களது மகள் இவான்கா டிரம்பும் அவரது கணவர் ஜெரேட் குஷ்னேகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தாய் தந்தைக்கு போட்டியாக இருவரும் செல்போனிலும் கேமராவிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இவான்காவும் இயற்கை எழில் கொஞ்சும் தாஜ்மஹாலை மகிழ்ச்சியுடன் ரசித்தார். இந்த தாஜ்மஹால் என்ற காதல் கோட்டையை டிரம்ப் குடும்பத்தினர் மறக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம்.

English summary
US President Donald Trump's writes in the visitor's book at the Taj Mahal- "Taj Mahal inspires awe, a timeless testament to the rich and diverse beauty of Indian culture! Thank you, India".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X