டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்: குழந்தைகளின் ஆபாச வீடியோ நெட்டில் பரவுவதை தடுக்க நடவடிக்கை

பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில்அமெரிக்காவின் என்சிஎம்இசி இந்தியாவின்என்சிஆர்பி ஆகிய அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவில் காணமல் போகும் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கான தேசிய மையம் மற்றும் இந்தியாவின் தேசிய குற்றப்பதிவேடு பிரிவு ஆகிய அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் பரவுவது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் சட்டப்படி 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆபாச படம், வீடியோ, ஓவியம் உள்ளிட்டவற்றை வைத்திருப்பது சட்ட விரோதம் ஆகும். அந்த குற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் மீது அங்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் பரவுவது தொடர்பாக புகார் அளிக்க www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை கடந்தாண்டு மத்திய அரசு தொடங்கியது.

சிறார் பாலியல் வன்கொடுமை

சிறார் பாலியல் வன்கொடுமை

தற்போது நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சிறுவர்கள் ஆபாசப் படங்கள் வைத்திருப்பதை தடுக்க குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

போக்சோ சட்டத்திருத்தம்

போக்சோ சட்டத்திருத்தம்

தற்போதுள்ள போக்சோ சட்டத்தின் 15 ஆவது பிரிவின்படி, இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். திருத்தம் செய்யப்பட்ட பிறகு 3 ஆண்டுகளுக்கு குறையாமலும் 5 ஆண்டுகள் வரை சிறையும் கடும் அபராதமும் விதிக்கப்படும்.

பிணையில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்படும் இதே தவறை இரண்டாவது முறையாக செய்தால், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

வாட்ஸ் அப் வீடியோ

வாட்ஸ் அப் வீடியோ

வாட்ஸ்ஆப்பில் சிறார்களை ஆபாசமாக சித்தரிக்கும் பதிவுகள் வந்தால் அதை அழித்துவிடவோ புகார் அளிக்கவோ தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

குழந்தைகள், சிறுவர்கள் ஆபாச படங்கள் வைத்திருப்பது பற்றித் தெரிந்து அதுகுறித்து பெற்றோர்கள் புகார் அளிக்காமலோ அதனை அழிக்காமலோ இருந்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் இதே குற்றத்தைச் செய்பவருக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

முதல் தகவல் அறிக்கை

முதல் தகவல் அறிக்கை

குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் பரவுவது தொடர்பாக புகார் அளிக்க www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை கடந்தாண்டு மத்திய அரசு தொடங்கியது. இதனடிப்படையில் யாராவது புகார் அளித்தால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதன் மீதான நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க அந்த இணையத்திலேயே தகவல் வழங்கவும் வசதி இருந்தது.

இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்

இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்

அமெரிக்காவில் காணமல் போகும் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கான தேசிய மையம் மற்றும் இந்தியாவின் தேசிய குற்றப்பதிவேடு பிரிவு ஆகிய அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் பரவுவது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குற்றவாளிகள் கைது

குற்றவாளிகள் கைது

இருநாடுகளுக்கு இடையில் கையெழுத்தாகியுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்த மூலம், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்த விசாரணையில் இந்திய அதிகாரிகள் துணிந்து செயல்பட முடியும். மேலும் வழக்குகள் துரிதமாக முடிக்கப்பட்டு குற்றவாளிகள் எளிதாக கைது செய்ய முடியும் என அதிகாரிகள் கூறினர்.

பாலியல் அத்துமீறல்

பாலியல் அத்துமீறல்

இணையத்தில் பரவும் குழந்தைகளின் ஆபாச வீடியோ, புகைப்படங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, தகவல்களை இருநாடுகளும் தங்களுக்கு இடையில் பரிமாறிக் கொள்ளும். மேலும், அமெரிக்காவில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் அத்துமீறல் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களைம் இந்திய அதிகாரிகள் விசாரணைக்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.

English summary
The MoU will provide access to more than one lakh Tipline reports available with the child molest trafficking, unsolicited obscene materials sent to a child.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X