டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஆதார்… முடியாது என்று மறுத்த ஆதார் ஆணையம்

Google Oneindia Tamil News

டெல்லி:இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஆதாரை பயன் படுத்துவது சாத்தியமற்றது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யுஐடிஏஐ டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அடையாளம் தெரியாத இறந்த உடல்களை அடையாளம் காண ஆதார் பயோ மெட்ரிக் தகவல்களை பயன்படுத்த வேண்டும். அதற்காக, மத்திய அரசு மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Using aadhaar biometrics to identify bodies not feasible, uidai tells delhi high court

அந்த வழக்கு விசாரணையின் போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

பயோ மெட்ரிக், கருவிழி தகவல் அனைவரிடமும் பெறப்படுகிறது. எனவே அதனை எடுக்க ஆதார் எண் அவசியமாகும். ஆதார் அட்டை சிறந்த நிர்வாகத்துக்காகவும், பல்வேறு சேவை மற்றும் சமூகநல திட்டங்களில் வெளிப்படைத் தன்மையுடன் மானியங்கள் வழங்கவும் உருவாக்கப்பட்டது.

ஆதாரில் உள்ள ஒருவரின் தனிப்பட்ட அடையாளங்களை இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண பயன்படுத்துவது சட்டரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் சாத்தியமற்றது. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றமும், ஆதாரில் உள்ள அடையாளங்களை சட்டத்தில் கூறப்பட்டுள்ள பயன்பாடுகளுக்கு தவிர வேறு எதற்கும் பயன் படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Using aadhaar biometrics to identify bodies not feasible, uidai tells delhi high court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X